துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), அறிவித்திருந்த திட்டமிடப்பட்ட போக்குவரத்து மாற்றுபாதைகளானது நேற்று (ஜூன் 9) முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 30, 2025 வரை ஷார்ஜா நோக்கிச் செல்லும் எமிரேட்ஸ் சாலையில் போக்குவரத்து மாற்றுப்பாதைகளை வாகன ஓட்டிகள் பயன்படுத்த வேண்டும்.
இது தொடர்பாக RTA வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்த மாற்றுப்பாதை துபாய்-அல் அய்ன் இன்டர்சேஞ்ச் மற்றும் ராஸ் அல் கோர்-அல் அவீர் இன்டர்சேஞ்ச் ஆகியவற்றுக்கு இடையேயான பரபரப்பான பகுதியை பாதிக்கும், இது துபாய் மற்றும் ஷார்ஜா இடையே பயணிகள் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு வழியாகும்.
முன்கூட்டியே திட்டமிடவும்:
இந்த மாற்றுபாதைகளின் காரணமாக ஓட்டுநர்களை பின்வருமாறு RTA அறிவுறுத்தியுள்ளது:
- பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுங்கள்
- நீண்ட பயண நேரங்களை எதிர்பார்க்கலாம்
- முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்தவும்
இந்த பராமரிப்பு காலத்தில் வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டவும் பாதுகாப்பைப் பராமரிக்கவும் RTA தெளிவான பலகைகள் மற்றும் போக்குவரத்து மேலாண்மை அமைப்புகளை நிறுவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிக மாற்றுப்பாதை, சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் நகரம் முழுவதும் மென்மையான, பாதுகாப்பான ஓட்டுநர் அனுபவத்தை உறுதி செய்வதற்கும் நடந்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
போக்குவரத்து நிலைமைகள் மற்றும் சாலை மூடல்கள் குறித்த நிகழ்நேர புதுப்பிப்புகளுக்கு, வாகன ஓட்டிகள் RTA-வின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக சேனல்கள் மற்றும் அப்ளிகேஷன்களை பின்பற்ற ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel