ADVERTISEMENT

பிராந்திய பதட்டங்களால் மூடப்படும் வான்வெளிகள்: அவசரகால விமான நிலைய திட்டத்தை செயல்படுத்தியுள்ள அமீரகம்…

Published: 19 Jun 2025, 2:11 PM |
Updated: 19 Jun 2025, 2:43 PM |
Posted By: Menaka

சமீபத்திய நாட்களாக பிராந்திய பதட்டங்கள் அதிகரித்து வருவதால், விமானப் போக்குவரத்து சீர்குலைந்து, பயணிகள் சிக்கித் தவிக்கும் நிலையில், பல அண்டை நாடுகள் தங்கள் வான்வெளியை மூடின. இதைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம் அவசரகால விமான நிலைய பதில் திட்டத்தை (emergency airport response plan) செயல்படுத்தியுள்ளது. இது தொடர்பான ஒரு அறிக்கையில், அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான கூட்டாட்சி ஆணையம் (ICP) நாட்டின் விமான நிலையங்களில் சீரான பயணிகள் இயக்கத்தை உறுதி செய்வதற்காக ஒரு விரிவான வணிக தொடர்ச்சித் திட்டத்தை செயல்படுத்துவதை உறுதிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

24 மணி நேரமும் இயங்கும் குழுக்கள், நிகழ்நேர ஆதரவு

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பயணிகளின் போக்குவரத்து, இமிக்ரேஷன் நடைமுறைகளை நிர்வகிக்கவும், மறு திட்டமிடப்பட்ட விமானங்களில் விமான நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்கவும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்களால் பணியாற்றப்பட்ட களக் குழுக்கள் 24/7 என முழு நேரமும் இயங்குவதற்காக நிறுத்தப்பட்டுள்ளன. தாமதங்கள் அல்லது மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்ட விமானங்களால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தற்காலிக தங்குமிடம், நிகழ்நேர புதுப்பிப்புகள் மற்றும் ஆதரவும் வழங்கப்படுவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

ஈரான், ஈராக், சிரியா, ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் தங்கள் வான்வெளியை மூடிய உடனேயே அவசர விமான நிலைய பதில் திட்டத்தை செயல்படுத்தியதாக ICP தெரிவித்துள்ளது. வான்வெளிகள் மூடியதன் விளைவாக விமானச் சேவைகள் ரத்து மற்றும் பல விமானங்கள் திருப்பி விடப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

இடையூறுகளுக்கு மத்தியில் சீரான விமான செயல்பாடுகளை உறுதி செய்தல்

இத்தகைய பதட்டமான சூழலிலும், விமானச்சேவை தரத்தைப் பாதுகாக்கவும் சிரமத்தைக் குறைக்கவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப ஐக்கிய அரபு அமீரக விமான நிலையங்களில் நுழைவு நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட்டன, மேலும் அர்ப்பணிப்புள்ள குழுக்கள் பயணிகளுக்கு அவர்களின் தற்போதைய பயணத் திட்டங்கள் குறித்து நேரடி வழிகாட்டுதலை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற நிலையில், பயணிகளின் ஒத்துழைப்பைப் பாராட்டிய ICP, எமிராட்டி மதிப்புகள் மற்றும் உலகளாவிய தரநிலைகளில் வேரூன்றிய பாதுகாப்பு, செயல்பாட்டு தொடர்ச்சி மற்றும் முன்கூட்டியே நெருக்கடி பதிலளிப்பு ஆகியவற்றிற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT