ADVERTISEMENT

அமீரகத்தில் தீவிரமடையும் வெயில்: வெப்பநிலை 49°C வரை உயர வாய்ப்பு..!!

Published: 30 Jun 2025, 2:05 PM |
Updated: 30 Jun 2025, 2:05 PM |
Posted By: Menaka

அமீரகத்தின் சில பகுதிகளில் பல நாட்களாக ஏற்ற இறக்கமான வானிலை பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்பொழுது வெப்பநிலை கடுமையாக உயர்கிறது. தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) இன்று வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், நாடு முழுவதும் 44°C முதல் 49°C வரை கடுமையாக வெப்ப நிலையானது அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில் கடலோர மற்றும் தீவுப் பகுதிகளில் அதிகபட்சமாக 37°C முதல் 42°C வரை வெப்பநிலை பதிவாகும் என்றும், மலைகளில், வெப்பநிலை 32°C முதல் 38°C வரை இருக்கும் என்றும் கணித்துள்ளது.

ADVERTISEMENT

எவ்வாறாயினும், இன்றைய தினம் ஓரளவு மேகமூட்டமான வானிலை நிலவும் என்றும், கிழக்கு கடற்கரையில் குறைந்தளவில் மேகங்கள் உருவாகக் கூடும் என்றும் NCM கூறியுள்ளது. ஈரப்பத அளவுகள் அதிகரிக்கும், குறிப்பாக கடலோரப் பகுதிகளில், இது அசௌகரியத்தை அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, காற்று தென்மேற்கிலிருந்து வடமேற்கு நோக்கி 10 முதல் 20 கிமீ/மணிவேகத்தில் வீசும், அவ்வப்போது 35 கிமீ/மணி வரை காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல்நிலைமைகளைப் பொறுத்தமட்டில், அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் இரண்டிலும் கடல் நிலைமைகள் குறைந்த வேகத்தில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குடியிருப்பாளர்களுக்கான அறிவுரை:

  • பிற்பகல் நேரங்களில் வீட்டிற்குள்ளேயே இருக்கவும்
  • நீரேற்றமாக இருக்க நிறைய தண்ணீர் குடிக்கவும்
  • வெப்ப பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், முடிந்தவரை வெளிப்புற உடல் செயல்பாடுகளைத் தவிர்க்கவும்

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel