உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் உள்ள இஸ்லாமியர்கள், ஈத் அல் அதாவைக் கொண்டாடி வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் பெருநாளான இன்று, குவைத் எமிர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா, பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீஃபா மற்றும் ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா ஆகியோருடன் தொலைபேசி அழைப்புகள் மூலம் ஈத் அல்-அதா வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நட்பு உரையாடல்களின் போது, பிராந்தியத் தலைவர்கள் ஒருவருக்கொருவர் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றுக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன், தங்கள் நாடுகளுக்கு அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்காக பிரார்த்தனை செய்ததாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.
மேலும், இந்த ஈத் அல் அதா அனைத்து முஸ்லிம் சமூகங்களுக்கும் ஆசீர்வாதங்களைத் தருவதாகவும், உலகம் முழுவதும் நல்லிணக்கத்தையும் செழிப்பையும் ஊக்குவிக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel