ஐக்கிய அரபு அமீரகக் குடியிருப்பாளர்கள் வருகின்ற ஜூலை 1, 2025 முதல், அர்மேனியாவிற்கு விசா இல்லாமல் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று செய்தி ஊடகம் ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது. இந்த புதிய கொள்கை முந்தைய விதிகளிலிருந்து குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகக் குடிமக்கள் மட்டுமே விசா இல்லாமல் நுழைய முடியும், அதே நேரத்தில் குடியிருப்பாளர்கள் வருகையின் போது விசாவிற்கு அதாவது அரைவல் விசா பெற தகுதியுடையவர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
யார் தகுதி பெறுகிறார்கள்?
புதுப்பிக்கப்பட்ட கொள்கையின் கீழ், குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் ரெசிடென்சி விசாக்களைக் கொண்ட ஐக்கிய அரபு அமீரகக் குடியிருப்பாளர்கள் சுற்றுலா, வணிகம் அல்லது ஓய்வு நோக்கங்களுக்காக விசா இல்லாமல் அர்மேனியாவிற்குள் நுழையலாம். மேலும் தங்கியிருக்கும் காலம் 180 நாட்களுக்குள் 90 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த நடவடிக்கை அர்மேனியாவின் பரந்த விசா தாராளமயமாக்கல் உத்தியின் ஒரு பகுதியாகும், இது இப்போது பின்வரும் ரெசிடென்ஸ் அனுமதி வைத்திருப்பவர்களுக்கு பொருந்தும்:
- வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகள்: UAE, சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், ஓமன் மற்றும் கத்தார்
- ஐரோப்பிய ஒன்றியம் (EU)
- ஷெங்கன் பகுதி
- அமெரிக்கா
Armenpress இன் கூற்றுப்படி, இந்தக் கொள்கை சமீபத்திய ஆர்மீனிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது அங்கீகரிக்கப்பட்டது மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதையும் முதலீட்டை ஈர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்மீனியா, ஐரோப்பா மற்றும் ஆசியாவிற்கும் இடையில் அமைந்துள்ளதால், UAE குடியிருப்பாளர்களுக்கு பெருகிய முறையில் பிரபலமான ஒரு இடமாக மாறியுள்ளது. இந்த நாடு அமீரகத்தில் இருந்து மூன்று மணி நேர விமானப் பயண தூரத்தில் உள்ளது. மேலும், Air Arabia மற்றும் Wizz Air ஆகியவற்றால் நேரடி விமான சேவைகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
பொதுவாக பயணிகள் ஆர்மீனியாவின் இயற்கை அழகு மற்றும் அதன் வளமான சமையல் கலாச்சாரத்தால் ஈர்க்கப்படுகிறார்கள். இது சிறந்த பயண அனுபவங்களுக்கு ஏற்ற இடமாக அமைகிறது. இந்நிலையில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள இந்த விசா இல்லாத அணுகல் சுற்றுலாப் பயணிகளின் வரவை அதிகரிக்கும் மற்றும் ஆர்மீனியா மற்றும் UAE இடையே உறவுகளை ஆழப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel