ADVERTISEMENT

கோடை காலத்தில் டெலிவரி ரைடர்களை பாதுகாக்க அமீரகத்தின் முயற்சி.. நாடு முழுவதும் 10,000 க்கும் மேற்பட்ட குளிரூட்டப்பட்ட ஓய்வு நிலையங்கள் அமைப்பு….

Published: 10 Jun 2025, 8:39 PM |
Updated: 11 Jun 2025, 2:03 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் கோடைவெப்பம் தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில், அமீரக அரசாங்கம் வருகின்ற ஜூன் 15 முதல் அதன் வருடாந்திர மதிய வேலை தடையை செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது. இது தொழிலாளர்களை கடுமையான வெப்பத்திலிருந்து பாதுகாக்க மூன்று மாதங்களுக்கு தினமும் மதியம் 12:30 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை வெளிப்புற வேலைகளைத் தடை செய்யும் ஒரு விதியாகும்.

ADVERTISEMENT

இந்த காலகட்டத்தில் எப்போதும் பயணத்தில் இருக்கும் டெலிவரி தொழிலாளர்களை ஆதரிக்க, நாடு முழுவதும் 10,000 க்கும் மேற்பட்ட குளிரூட்டப்பட்ட ஓய்வு நிலையங்கள் வழங்கப்படுகிறது. இந்த இடங்கள், நாளின் வெப்பமான நேரத்தில் ஊழியர்கள் குளிர்ச்சியடையவும், ஓய்வெடுக்கவும் மற்றும் நீரேற்றம் செய்யவும் வாய்ப்பளிக்கின்றன.

மனிதவளம் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (MoHRE), துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), பிற அரசுத் துறைகள் மற்றும் டெலிவரி தளங்களுடன் இணைந்து, இந்த முயற்சியை முன்னெடுத்து வருகிறது. கடந்த ஆண்டு, இதேபோல் 6,000 ஓய்வு நிறுத்தங்கள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு, இன்னும் ஆயிரக்கணக்கானவை சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். டெலிவரி ஆப்களில் உள்ள மேப் மூலம், டெலிவரி தொழிலாளர்கள் அருகிலுள்ள ஓய்வு நிலையத்தை எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் வெளிப்புற தொழிலாளர்களுக்கு வெப்ப சோர்வு ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்காக மதிய வேலை தடை தொடங்கப்பட்டது. இதனடிப்படையில் வேலை செய்யும் இடங்களில் நிழலான பகுதிகள், குளிர்ந்த நீர், குளிரூட்டும் உபகரணங்கள் மற்றும் முதலுதவி ஆகியவற்றை முதலாளிகள் வழங்க வேண்டும். அத்துடன் இந்த மதியநேர இடைவேளை  மீறல்களை 600590000 என்ற எண்ணை அழைப்பதன் மூலமோ அல்லது MoHRE யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலமோ பொதுமக்களைப் புகாரளிக்க அமைச்சகம் ஊக்குவிக்கிறது.

இதற்கிடையில், குவைத் இதே போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அங்குள்ள டெலிவரி ரைடர்கள் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் இறுதி வரை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது, இது அவர்கள் கடுமையான வெப்பத்தில் பாதுகாப்பாக இருக்க உதவுகிறது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel