ADVERTISEMENT

அமீரகத்தில் 20 வாகனங்கள் மோதி பெரிய சாலை விபத்து.. 9 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தகவல்…

Published: 12 Jun 2025, 10:28 AM |
Updated: 12 Jun 2025, 10:33 AM |
Posted By: Menaka

அமீரகத்தில் வைப் அல் ஹன்னாவிலிருந்து (Waib Al Hannah) திப்பா அல் ஃபுஜைராவுக்குச் (Dibba Al Fujairah) செல்லும் சாலையில் நான்கு லாரிகள் உட்பட 20 வாகனங்கள் மோதிய ஒரு பெரிய சாலை விபத்தில் ஒன்பது பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர். அவசரகால குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டதால் சாலை மணிக்கணக்கில் மூடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

திப்பா அல் புஜைரா காவல்துறை, மசாஃபி காவல் நிலையம், போக்குவரத்து மற்றும் ரோந்துத் துறை மற்றும் தேசிய ஆம்புலன்ஸ் குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்ட நிலையில், எட்டு பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும், ஒருவருக்கு மிதமான காயம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன் பின்னர் விபத்து நடந்த இடத்தில் வாகனங்கள் அகற்றப்பட்டதால் சாலை மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.

விபத்திற்கான காரணத்தை போலீசார் இப்போது விசாரித்து வருகின்றனர், மேலும் தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறுகின்றனர். குறிப்பாக மலைப்பாங்கான அல்லது பரபரப்பான சாலைகளில் கவனமாக வாகனம் ஓட்டுமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். அனைவரும் வாகனங்களுக்கு இடையில் பாதுகாப்பான தூரத்தை பின்பற்றவும் வேக வரம்புகளை கடைபிடிக்கவும் வலியுறுத்துகின்றனர்.

ADVERTISEMENT

பள்ளி பேருந்துகள் மற்றும் லாரிகள் சம்பந்தப்பட்ட சாலை விபத்துகளில் அதிகரிப்பு

பள்ளி பேருந்துகள் சம்பந்தப்பட்ட இரண்டு சமீபத்திய விபத்துகளைத் தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜூன் 9 அன்று, E311 நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் மோதியதில் 13 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் காயமடைந்தனர். ஒரு நாள் கழித்து அஜ்மானில், மற்றொரு சிறிய பள்ளி பேருந்து விபத்து பதிவாகியுள்ளது, இருப்பினும் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. புதிய தரவுகளின்படி, E311 இல் லாரி தொடர்பான நெரிசல் இந்த ஆண்டு இதுவரை ஆறு இறப்புகளையும் 137 விபத்துகளையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2024 இல் சாலை விபத்துகளில் 384 பேர் இறந்தனர், இது 2023 இல் 352 இறப்புகளிலிருந்து 9% அதிகரிப்பு மற்றும் 2022 இல் 343 இறப்புகளை விட 12% அதிகம் என்று கூறப்படுகின்றது. இத்தகைய அசம்பாவிதங்களைத் தடுக்க சாலைகளில் அதிக பொறுப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு ஓட்டுநர்களை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel