ADVERTISEMENT

சவுதி அரேபியா: பொழுதுபோக்கு பூங்காவில் உடைந்து விழுந்த ‘360 Degrees’ ரைடு!! 23 பேருக்கு காயம்!!

Published: 31 Jul 2025, 7:34 PM |
Updated: 31 Jul 2025, 7:40 PM |
Posted By: Menaka

இன்று (ஜூலை 31 வியாழக்கிழமை) சவுதி அரேபியாவின் தைஃப் அருகே உள்ள ஹடா பகுதியில் உள்ள கிரீன் மவுண்டன் பார்க்கில் ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் விருந்தினர்களுடன் சுழன்று கொண்டிருந்த ஒரு சவாரி செயலிழந்த சம்பவம் பலரையும் அச்சுறுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் குறைந்தது 23 பேர் காயமடைந்ததாகவும், சிலர் படுகாயமடைந்திருப்பதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட வீடியோக்கள், கட்டமைப்பு விரிசல் அடைந்து உரத்த சத்தத்துடன் சரிவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பயணிகளுடன் சவாரி முன்னும் பின்னுமாக ஆடுவதைக் காட்டுகிறது.

ADVERTISEMENT

‘360 டிகிரி’ என்று அழைக்கப்படும் பிரபலமான  சவாரியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்றது, மக்கள் அந்த மிகப்பெரிய சவாரியில் பயணித்தபோது அதன் மையக் கம்பம் பாதியாக உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

சவூதி நாளிதழான ஓகாஸ் வெளியிட்ட விபரங்களின் படி, இதில் சிக்கியவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் மிதமானது முதல் கடுமையானது வரை இருந்தன. சில பயணிகள் சவாரியின் உடைந்த கம்பத்தால் தாக்கப்பட்டதாகவும், மற்றவர்கள் இடிந்து விழுந்தபோது தூக்கி எறியப்பட்டு காயமடைந்ததாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இதனையடுத்து அவசர சேவைகள் மற்றும் பாதுகாப்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைவாகச் சென்று பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, தாயிஃபில் உள்ள பல மருத்துவமனைகள் கோட் யெல்லோ (code yellow) அவசர நிலைகளைச் செயல்படுத்தி காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கத் தொடங்கியதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் பலர் பூங்காவிலேயே முதலுதவி பெற்று, பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இயந்திரக் கோளாறிற்கான காரணம் குறித்து அதிகாரிகள் அவசர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ADVERTISEMENT

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

Link: Khaleej Tamil Whatsapp Channel