ADVERTISEMENT

ஏர் அரேபியாவின் கோடைகால சலுகைகள்: 149 திர்ஹம்ஸ் முதல் தொடங்கும் விமான கட்டணம்..!!

Published: 1 Jul 2025, 11:55 AM |
Updated: 1 Jul 2025, 12:00 PM |
Posted By: Menaka

ஷார்ஜாவை தளமாகக் கொண்ட பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் அரேபியா, GCC மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு இடங்களுக்கு 149 திர்ஹம்சிலிருந்து ஒரு வழி டிக்கெட்டுகளை வழங்கும் கோடைகால சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. திங்களன்று ஏர் அரேபியா வெளியிட்ட அறிவிப்பின் படி, ஜூலை 14 முதல் செப்டம்பர் 30, 2025 வரையிலான பயணங்களுக்கு, ஜூன் 30 முதல் ஜூலை 6, 2025 வரை முன்பதிவு செய்வதன் மூலம் பயணிகள் தள்ளுபடி கட்டணங்களைப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

GCC இலக்குகள்

  • ஷார்ஜாவில் இருந்து பஹ்ரைன் அல்லது மஸ்கட்: 149 திர்ஹம்ஸ்
  • ஷார்ஜாவில் இருந்து தம்மம், ரியாத், குவைத், சலாலா: 199 திர்ஹம்ஸ்
  • ஷார்ஜாவில் இருந்து அபா, தபூக், யான்பு: 298 திர்ஹம்ஸ்
  • ஷார்ஜாவில் இருந்து தோஹா: 399 திர்ஹம்ஸ்
  • ஷார்ஜாவில் இருந்து ஜித்தா, மதீனா: 449 திர்ஹம்ஸ்
  • ஷார்ஜாவில் இருந்து தைஃப்: 574 திர்ஹம்ஸ்

இந்திய நகரங்கள்

இந்தியாவிற்கு பயணிப்பதற்கான சலுகைகளையும் விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது.

  • அபுதாபியில் இருந்து சென்னை: 275 திர்ஹம்ஸ்
  • ஷார்ஜா முதல் அகமதாபாத்: 299 திர்ஹம்ஸ்
  • அபுதாபி முதல் கொச்சி வரை: 315 திர்ஹம்ஸ்
  • ஷார்ஜா முதல் டெல்லி: 317 திர்ஹம்ஸ்
  • ஷார்ஜா முதல் மும்பை: 323 திர்ஹம்ஸ்
  • அபுதாபி முதல் திருவனந்தபுரம்: 325 திர்ஹம்ஸ்

வலுவான முதல் காலாண்டு முடிவுகள்

விமான நிறுவனம் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நிகர லாபம் 355 திர்ஹம்ஸ் மில்லியன் என அறிவித்துள்ளது, இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 266 மில்லியன் திர்ஹம்சிலிருந்து 34% அதிகமாகும். இதன் மூலம் அதன் வருவாய் 14% அதிகரித்து 1.75 பில்லியன் திர்ஹம்ஸ் ஆக உயர்ந்துள்ளது. ஜனவரி மற்றும் மார்ச் 2025 க்கு இடையில் ஏர் அரேபியா 4.9 மில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்றது, இது ஆண்டுக்கு ஆண்டு 11% அதிகரிப்பு என கூறப்பட்டுள்ளது. குறைந்த விமான கட்டண நிர்ணயம் மற்றும் வலுவான செயல்திறனுடன், ஏர் அரேபியா பிராந்தியத்தில் முன்னணி குறைந்த விமான கட்டணம் வழங்கும் விமான நிறுவனமாக தனது நிலையை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel