பிராந்தியத்தின் மிகப்பெரிய பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் அரேபியா, பயணிகளின் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு ஒரு வழிப் பயணங்களுக்கு வெறும் 149 திர்ஹம்ஸிலிருந்து டிக்கெட்டுகளை வழங்கும் ஒரு அற்புதமான புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்கள் உட்பட பல்வேறு சர்வதேச இடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த வரையறுக்கப்பட்ட நேர விற்பனை, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை செய்யப்படும் முன்பதிவுகளுக்கும், ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 31 வரையிலான பயண தேதிகளுக்கும் செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவான பயணங்கள் அல்லது குடும்ப வருகைகளில் சேமிக்க விரும்பும் பயணிகளுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாக இருக்கும் என கூறப்படுகின்றது.
சலுகை விபரங்கள்
ஷார்ஜாவிலிருந்து, விமான நிறுவனம் மலிவு கட்டணத்தில் ஒரு வழி விமான சேவைகளை வழங்குகிறது:
- மஸ்கட் மற்றும் பஹ்ரைனுக்கு 149 திர்ஹம்ஸ்
- ரியாத், தம்மம் மற்றும் குவைத்துக்கு 199 திர்ஹம்ஸ்
- தோஹாவுக்கு 354 திர்ஹம்ஸ்
இவை தவிர, அபா, யான்பு, தபுக், காசிம், தைஃப் மற்றும் ஹெயில் உள்ளிட்ட பிற சவுதி நகரங்களுக்கும் மலிவு விலையில் விமான கட்டணங்கள் கிடைக்கின்றன. அபுதாபியிலிருந்து புறப்படுபவர்கள் பின்வரும் இடங்களுக்கு மலிவு கட்டணங்களில் விமான சேவைகளை பெறலாம்:
- மஸ்கட்டுக்கு 399 திர்ஹம்ஸ்
- குவைத்துக்கு 398 திர்ஹம்ஸ்
- சலாலாவுக்கு 578 திர்ஹம்ஸ்
இந்தச் சலுகை இந்தியா மற்றும் இலங்கை உட்பட குறிப்பிட்ட நாடுகளுக்கு மிகவும் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகிறது. குறிப்பாக, இந்திய நகரங்களுக்குச் செல்லும் பயணிகள் பின்வரும் சலுகைகளை அனுபவிக்கலாம்:
- அபுதாபியிலிருந்து கோழிக்கோடுக்கு 249 திர்ஹம்ஸ்
- மும்பை, கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் சென்னைக்கு 275 திர்ஹம்ஸ்
- ராஸ் அல் கைமாவிலிருந்து கோழிக்கோடுக்கு 275 திர்ஹம்ஸ்
எனவே ஏர் அரேபியா பயணிகள் தங்கள் விமானங்களை விரைவாக முன்பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகின்றது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel