ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளுக்குநாள் வெப்பநிலை அதிகரித்து 50ºC வரை உயர்வதால், கடுமையான வெயிலின் தாக்கத்தை குடியிருப்பாளர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இத்தகைய சூழலில், மனதைத் தொடும் செயலாக, அஜ்மான் காவல்துறையினர் வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு குளிர்ச்சியான சிற்றுண்டிகளை வழங்கி வருகின்றனர்.
காவல்துறை அதிகாரிகள் ஐஸ் வாட்டர், பழச்சாறு மற்றும் ஐஸ்கிரீம்களை அப்பகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்குவதைப் பகிரப்பட்ட புகைப்படத்தில் காணமுடிகிறது. தொழிலாளர்கள் மட்டுமின்றி, அந்த வழியாக செல்பவர்களும் பெற்று கொண்டனர். இது இந்த முயற்சியின் பின்னணியில் உள்ள சமூக உணர்வைப் பிரதிபலிக்கிறது.
நாட்டில் நிலவும் கடுமையான கோடையில் வெளிப்புற தொழிலாளர்களை ஆதரிக்க அஜ்மான் காவல்துறையின் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த செயல் உள்ளது. முன்னதாக, 2023 ஆம் ஆண்டில், ‘We Come to You, Our Summer is Cool’ என்ற தலைப்பில் பிரச்சாரத்தைத் தொடங்கியது, கோடையில் தொழிலாளர்கள் குளிர்ச்சியாக இருப்பதை உறுதிசெய்ய பல்வேறு வேலை தளங்களைப் பார்வையிட்டது. இத்தகைய முயற்சிகள் உச்ச வெப்பக் காலத்தில் சமூகப் பராமரிப்பு மற்றும் தொழிலாளர் நலனுக்கான எமிரேட்டின் உறுதிப்பாட்டை தொடர்ந்து எடுத்துக்காட்டுகின்றன.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel