அமீரக செய்திகள்

துபாய்-ஷார்ஜா போக்குவரத்து நெரிசல்: தினசரி அவதியுறும் 90% வாகன ஓட்டிகள்.. ஆய்வில் தகவல்..!!

ஷார்ஜா மற்றும் துபாயில் சமீப காலமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், 10 வாகன ஓட்டுநர்களில் 9 பேர் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை அனுபவிப்பதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வளர்ந்து வரும் மக்கள்தொகை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் சாலைகளில் போக்குவரத்து நெரிசலை கடுமையாக்குகிறது என காரணம் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ‘RoadSafetyUAE’ நடத்திய அல் வத்பா தேசிய இன்சூரன்ஸ் (Al Wathba National Insurance) நிறுவனத்தால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு, துபாயில் 91% ஓட்டுநர்களும் ஷார்ஜாவில் 90% ஓட்டுநர்களும் தினசரி போக்குவரத்து சிக்கல்களைப் புகாரளிப்பதாகக் காட்டுகிறது.

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பதிலளித்தவர்களில், 86% வாகன ஓட்டுநர்கள் நெரிசலை அனுபவிப்பதாகவும், 80% பேர் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு போக்குவரத்து மோசமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல் வத்பா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி முரளிகிருஷ்ணன் ராமன் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை தினமும் அனைவரையும் பாதிக்கிறது என்று கூறியுள்ளார்.

கடுமையாகும் போக்குவரத்து நெரிசல், ஐக்கிய அரபு அமீரகத்தின் விரைவான மக்கள்தொகை வளர்ச்சியுடன் நெருக்கமாக தொடர்புடையது. வேர்ல்டோமீட்டர்களின் கூற்றுப்படி, நாட்டின் மக்கள் தொகை 2020 இல் 9.4 மில்லியனில் இருந்து 2025 இல் 11.3 மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. துபாய் மட்டும் இப்போது 4 மில்லியன் குடியிருப்பாளர்களை நெருங்கி வருகிறது, இது சாலை நெட்வொர்க்குகளில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

புதிய குடியிருப்பாளர்களின் வருகையால் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்த முடியாததாகி விடுகிறது. மார்ச் 2025 இல், ஃபெடரல் நேஷனல் கவுன்சில் உறுப்பினர் டாக்டர் அட்னான் அல் ஹம்மாதி துபாய்க்கும் ஷார்ஜாவிற்கும் இடையிலான தினசரி போக்குவரத்து குறித்து கவலைகளை எழுப்பினார், இதனால் பயணிகள் மீது ஏற்படும் மனரீதியான பாதிப்பையும் சுட்டிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வு வாகன ஓட்டிகளிடம் நெரிசலுக்கான பின்வரும் முக்கிய காரணங்களையும் வெளிப்படுத்தியுள்ளது. அவை

  • சாலையில் அதிகமான வாகனங்கள்
  • அலுவலகம் மற்றும் பள்ளிகளுக்கு ஒரே நேரங்களில் செல்லக்கூடிய நிலைமை
  • தனியார் கார்களை அதிகமாக நம்பியிருத்தல்
  • மோசமான ஓட்டுநர் நடத்தை
  • வரையறுக்கப்பட்ட பொது போக்குவரத்து விருப்பங்கள்
  • சாலை வடிவமைப்பு மற்றும் பைக்கிங் அல்லது நடைபயிற்சி உள்கட்டமைப்பு போன்ற மாற்று வழிகள் இல்லாமை

பொதுவாக, காலை நேரங்களில் வேலை மற்றும் பள்ளி செல்வதற்காக சாலைகளில் செல்லும் வாகனங்களால் நெரிசல் அதிகரிக்கும் என்றும் அதை தொடர்ந்து போக்குவரத்து மதியம் மோசமாக இருக்கும் என்றும், ஓட்டுநர்கள் கூறியுள்ளனர். இத்தகைய கடும் போக்குவரத்தை குறைக்க, குடியிருப்பாளர்கள் பின்வரும் நடைமுறைகளை பரிந்துரைத்துள்ளனர். அவை

  • நிறுவனங்கள் தொலைதூர வேலைகளை ஊக்குவித்தல்
  • பொது போக்குவரத்தை விரிவுபடுத்துதல்
  • பஸ் சேவைகளை மேம்படுத்துதல்
  • பகிரப்பட்ட சவாரிகள் மற்றும் மாற்று போக்குவரத்து விருப்பங்களை ஊக்குவித்தல்

இவ்வாறு அதிகாரிகளுக்கு தரவுகளை வழங்குவதும் பயனுள்ள தீர்வுகளை வடிவமைக்க உதவுவதும் இந்த ஆய்வின் குறிக்கோள் என்று ‘RoadSafetyUAE’யின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் தாமஸ் எடெல்மேன் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!