ADVERTISEMENT

துபாய்: வெளியே வெயில் கொளுத்தினாலும் மெட்ரோவில் எப்போதும் கூல்தான்..!! AC-ஐ மேம்படுத்தியுள்ள RTA..!!

Published: 25 Jul 2025, 9:23 AM |
Updated: 25 Jul 2025, 9:23 AM |
Posted By: Menaka

அமீரகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையிலும் துபாய் மெட்ரோ பயணிகள் இனி கூலாக பயணிக்கலாம். ஏனெனில் மெட்ரோ நிலையங்களில் உள்ள ஏர் கண்டிஷனிங் அமைப்புகள் உச்ச செயல்திறனில் செயல்படுவதாகவும், வெளிப்புற வெப்பத்தை மீறி வெப்பநிலையை 24 முதல் 25°C அளவில் சீராக வைத்திருப்பதாகவும் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) பயணிகளுக்கு உறுதியளித்துள்ளது.

ADVERTISEMENT

ரெட் லைனில் 14 நிலையங்கள் மற்றும் இரண்டு கார் பார்க்கிங் இடங்களில் காற்றோட்டம் மற்றும் குளிரூட்டும் அமைப்புகளை மேம்படுத்தும் ஒரு பெரிய பராமரிப்பு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை RTA வெற்றிகரமாக முடித்த பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. air handling units,chilled water pumps, pressurisation units மற்றும் fan coil units உட்பட மொத்தம் 876 கூறுகள் மாற்றப்பட்டன அல்லது புதுப்பிக்கப்பட்டன என்றும், இவை அனைத்தும் மெட்ரோ செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்காமல் மேற்கொள்ளப்பட்டதாகவும் RTA தெரிவித்துள்ளது.

Dubai Metro cabins to stay at 24ºC this summer as ACs get upgrade

ADVERTISEMENT

அமீரகத்தில் நிலவும் தீவிரமான கோடை வெப்பத்தில் மெட்ரோவில் வசதியான சூழலைப் பராமரிப்பது ஒரு சிறிய விஷயமல்ல என்று குறிப்பிட்ட RTA, ரயில்கள் ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும் வந்து கதவுகள் அடிக்கடி திறக்கப்படுவதால், வெப்ப காற்று நிலையங்களுக்குள் தொடர்ந்து செல்கிறது என்பதையும் விளக்கியுள்ளது.

Dubai Metro cabins to stay at 24ºC this summer as ACs get upgrade

ADVERTISEMENT

முதல் கட்டத்தில் முடிக்கப்பட்ட 261 ஏர் கண்டிஷனிங் அமைப்புகள் முந்தைய புதுப்பித்தலை அடிப்படையாகக் கொண்டு பின் இரண்டாம் கட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது அமைப்பின் செயல்திறனை மேலும் மேம்படுத்துவதற்கான திட்டங்களுடன் கட்டம் 3 க்கான ஏற்பாடுகள் ஏற்கனவே நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துபாயின் பொதுப் போக்குவரத்து தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால், பயணிகளின்  நம்பகத்தன்மை மற்றும் செயல்பாட்டுத் திறனை உறுதி செய்வது ஒரு முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்பதை RTA மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel