துபாய் நிலத் துறையானது (DLD) கடந்த மே மாதம் ‘பிரிப்கோ மின்ட் (Prypco Mint)’ மூலம் பிராந்தியத்தின் முதல் டோக்கனைஸ் செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் முதலீட்டு தளத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் Prypco, Virtual Assets Regulatory Authority (Vara), UAE மத்திய வங்கி, Dubai Future Foundation மற்றும் Zand Digital Bank ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியாகும்.
இந்த தளம் சோதனை கட்டத்தில் வெறும் 2,000 திர்ஹம்ஸ் ரியல் எஸ்டேட் முதலீட்டில் பரந்த பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி்தொடங்கப்பட்ட முதல் மாதத்திற்குள், Prypco Mint இல் 9 மில்லியன் திர்ஹம்ஸ்க்கும் அதிகமான மதிப்புள்ள பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இதன் முதல் முதலீட்டாளர்களில் ஒருவரான அஹ்மத் பைசல் அல்-ஜமால் என்பவர் கூறும் போது, இப்போது அனைவரும் துபாயில் நில உரிமையாளராக முடியும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் பல சொத்துக்களில் 100,000 திர்ஹம்ஸ் வரை முதலீடு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். இது மிதமான சேமிப்பு உள்ள அமீரகத்தில் வசிக்கும் அனைத்து தனிநபர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
“நான் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது இதுவே முதல் முறை, ஏனெனில் பிரிப்கோ அதை அணுகக்கூடியதாக மாற்றுகிறது. இது ரியல் எஸ்டேட் சந்தையில் நுழைய முடியாத என்னைப் போன்றவர்களை பெரிதும் ஈர்க்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மூன்று வருடங்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் மற்றொரு குடியிருப்பாளர், இரண்டு டோக்கன் செய்யப்பட்ட யூனிட்களில் 6,000 திர்ஹம் முதலீடு செய்து, நீண்டகால கனவை நனவாக்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் துபாயில் சொத்து வைத்திருக்க விரும்பினேன், ஆனால் அதிக முன்பண செலவுகள் மற்றும் அரசு சார்ந்த வேலைகள் என்னைத் தடுத்து நிறுத்தின. ஆனால் பிரிப்கோவுடன் இது சாத்தியமாகி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இத்தகைய டோக்கனைஸ் செய்யப்பட்ட ரியல் எஸ்டேட்டின் எளிமை மற்றும் அணுகல் பயனர்களை மீண்டும் முதலீடு செய்யவும், அதைப் பற்றி மற்றவர்களிடம் பரப்பவும் தூண்டுகிறது என பல குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். துபாயின் அதிக ஆக்கிரமிப்பு விகிதங்கள் மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த சொத்து விலைகளுடன், நம்பகமான, நீண்ட கால வருமானத்தை நாடுபவர்களுக்கு டோக்கனைஸ் செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் ஒரு வலுவான வழி என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel