துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), அல் வாஸ்ல் ஸ்ட்ரீட் மற்றும் அல் மனாரா ஸ்ட்ரீட் இண்டர்செக்ஷனில் முக்கிய சாலை மேம்பாட்டுப் பணிகளை முடித்ததாக அறிவித்துள்ளது, இதன் விளைவாக சாலை திறனில் 50 சதவீதம் அதிகரிப்பு மற்றும் 30 சதவீதம் வரை போக்குவரத்து தாமதங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தலின் ஒரு பகுதியாக, இண்டர்செக்ஷனில் உள்ள பாதைகளின் எண்ணிக்கை மூன்றாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது, இது அப்பகுதியில் போக்குவரத்து ஓட்டத்தை கணிசமாக மேம்படுத்துகிறது. இந்த திட்டத்தில் பின்வரும் உள்கட்டமைப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன:
- அல் மனாரா ஸ்ட்ரீட்டிலிருந்து ஷேக் சையத் சாலைக்குச் செல்லும் வாகனங்களுக்கான புதிய பாதை
- அதே திசையில் செல்லும் போக்குவரத்திற்கான பிரத்யேக U- டர்ன் பாதை
இந்த மேம்பாடுகள் RTAவின் பரந்த 2025 போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது துபாயின் சாலை நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதிலும் நகரின் முக்கிய காரிடார்கள் முழுவதும் இணைப்பை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது.
“இந்த முயற்சிகள் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துதல், நெரிசலைக் குறைத்தல் மற்றும் ஜுமேரா, உம்சுகீம் மற்றும் அல் சஃபா போன்ற முக்கிய குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளுக்கு இடையே சீரான போக்குவரத்தை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கான எங்கள் உத்தியுடன் ஒத்துப்போகின்றன” என்று RTA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. வளர்ந்து வரும் மக்கள்தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் தடையற்ற ஓட்டுநர் அனுபவத்தை உறுதி செய்வதற்கும் எமிரேட் முழுவதும் தொடர்ந்து உள்கட்டமைப்பு மேம்பாடுகளைச் செய்வதற்கான அதன் உறுதிப்பாட்டை ஆணையம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel