ADVERTISEMENT

UAE: தொடங்கியது கிரேட் துபாய் சம்மர் சேல்..!! 12 மணி நேரத்திற்கு 90% வரை தள்ளுபடி

Published: 18 Jul 2025, 4:10 PM |
Updated: 18 Jul 2025, 4:13 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், துபாய் வெப்பநிலையால் மட்டுமல்ல, அட்டகாசமான சலுகைகளாலும் சூடுபிடித்துள்ளது. குடியிருப்பாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட துபாய் சம்மர் சர்ப்ரைசஸின் (DSS) புதிய பதிப்பு தள்ளுபடிகள் மற்றும் பரிசுகளுடன் மீண்டும் வந்துள்ளது. இந்த மிகப்பெரிய விற்பனை நிகழ்வு இன்று (ஜூலை 18, வெள்ளிக்கிழமை) ஒரு நாள் ஷாப்பிங் கொண்டாட்டத்துடன் தொடங்குகிறது.

ADVERTISEMENT

அதன்படி இன்று காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இந்த 12 மணி நேர விற்பனை மால் ஆஃப் தி எமிரேட்ஸ், சிட்டி சென்டர் மிர்டிஃப், சிட்டி சென்டர் தேரா, சிட்டி சென்டர் மெய்செம் மற்றும் மை சிட்டி சென்டர் அல் பர்ஷா ஆகிய ஐந்து பிரபலமான மால்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை நிகழ்வில் ஷாப்பிங் செய்பவர்கள் 100க்கும் மேற்பட்ட சிறந்த உள்ளூர் மற்றும் சர்வதேச பிராண்டுகளில் 90 சதவீதம் வரை தள்ளுபடியை அனுபவிக்கலாம்.

 

ADVERTISEMENT

ஷாப்பிங் செய்வது மட்டுமின்றி, மால் ஆஃப் தி எமிரேட்ஸ், சிட்டி சென்டர் மிர்டிஃப் அல்லது சிட்டி சென்டர் தேராவில் 300 திர்ஹம் அல்லது அதற்கு மேல் செலவிடுபவர்கள் ‘ஸ்பெஷல் ப்ரைஸ் வீலை’ (special prize wheel) சுழற்றி உடனடி வெகுமதிகளைப் பெறலாம். அதேசமயம், SHARE செயலி மூலம் பின்வரும் பிரத்யேக சலுகைகளையும் பெறலாம்:

  • ஃபேஷன், ஆபரணங்கள் மற்றும் உணவகங்களில் செலவிடுபவர்கள் உங்கள் ரசீதுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் 5 சதவீத கேஷ்பேக்கைப் பெறலாம்.
  • மால் ஆஃப் தி எமிரேட்ஸில், ஒரே பரிவர்த்தனையில் 2,000 திர்ஹம்ஸ் அல்லது அதற்கு மேல் வாங்கினால் 20x SHARE புள்ளிகளைப் பெற முடியும்.

12 மணி நேர விற்பனையானது, ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 10 வரை நகரம் முழுவதும் நடைபெறும் கிரேட் துபாய் சம்மர் சேல் (GDSS) இன் தொடக்கத்தைக் குறிக்கிறது, இதில் பல்வேறு விற்பனை நிலையங்களில் இன்னும் அதிகமான சலுகைகள் மற்றும் ப்ரோமோஷன்கள் இடம்பெறும். கூடுதலாக, GDSSஇன் போது,  பங்கேற்கும் கடைகளில் 300 திர்ஹம்ஸ் அல்லது அதற்கு மேல் செலவழிக்கும் அனைவரும் மெகா டிராவில் பங்கேற்கலாம். அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் 1 மில்லியன் திர்ஹம்ஸ் ரொக்கம் அல்லது புத்தம் புதிய Nissan Patrol காரை தட்டிச் செல்லலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

இவை தவிர, Skywards Everyday உறுப்பினர்கள் ‘Skywards Everyday’ அல்லது ‘Skywards Miles Mall UAE’ வழியாக செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 25 சதவீத போனஸ் மைல்களை வெல்லலாம்.
அத்துடன் எந்தவொரு ஸ்கைவர்ட்ஸ் எவ்ரிடே கூட்டாளர் கடையிலும் ஸ்கைவர்ட்ஸ் மைல்ஸ் மால் UAEயிலும் 100 திர்ஹம்ஸ் அல்லது அதற்கு மேற்பட்ட செலவுகளுக்கு 1 மில்லியன் மைல்களை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும். எனவே, இப்போது நீங்கள் ஃபேஷன், உணவு அல்லது மின்னணு சாதனங்களை வாங்கினாலும், இந்த DSS இல் பெரிய சேமிப்புகளையும் இன்னும் பெரிய வெகுமதிகளையும் அனுபவிக்கலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel