துபாய் டியூட்டி ஃப்ரீ 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 165 மில்லியன் திர்ஹம்ஸிற்கு சாக்லேட்டுகளை மட்டும் விற்றதாக தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ் சிடாம்பி தெரிவித்துள்ளார். அதாவது சுமார் 2.5 மில்லியன் சாக்லேட் பார்கள் விற்கப்பட்டதாகக் கூறியுள்ளார், இது துபாய் டூட்டி ஃப்ரீயின் மொத்த விற்பனையில் 40 சதவீதமாகும். இந்த சாக்லேட்டுகளில் பெரும்பாலானவை UAE-ஐ தளமாகக் கொண்ட பிராண்டுகளால் தயாரிக்கப்படுகின்றன.
எனவே பயணிகள் இந்த சாக்லேட்டுகளை சாப்பிடும் ஒவ்வொரு முறையும், அவர்கள் உள்ளூர் பொருளாதாரத்தையும் ஆதரிக்கிறார்கள் என்பதையும் சிடாம்பி கூறியுள்ளார். பல உள்ளூர் பிராண்டுகள் தனித்துவமான சுவைகள் மற்றும் கலாச்சார உத்வேகத்துடன் உலகளாவிய பயணிகளை கவர்ந்திழுக்கின்றன என கூறப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அதிகம் விற்பனையானவை குறித்த விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
FIX
ஃபிக்ஸ் அதன் வைரலான பிஸ்தா குனாஃபா சாக்லேட் மூலம் உலகளாவிய புகழைப் பெற்றது. இந்த பிராண்ட் “துபாய் சாக்லேட்டுகள்” என்ற சொல்லுக்கு ஒத்ததாக மாறியது.
L’ocali
ஐக்கிய அரபு அமீரகத்தின் பாரம்பரியத்தை ஆடம்பரத்துடன் இணைத்து, 24k உண்ணக்கூடிய தங்கத்தில் மூடப்பட்ட நல்ல சுவையான சாக்லேட்டுகள் மற்றும் பிரீமியம் பேரீச்சம்பழங்களை வழங்குகிறது. இந்த பிராண்டின் பல்வேறு வரம்பில் சாக்லேட் பூசப்பட்ட பேரீச்சம்பழங்கள் மற்றும் பிஸ்தா, ரோஜா மற்றும் ஆரஞ்சு தோல் போன்றவற்றுடன் கூடிய பேரீச்சம்பங்கள், பெல்ஜியம் டிரஃபிள்ஸ் மற்றும் சுவிஸ் சாக்லேட்டுகள் ஆகியவை அடங்கும்.
Bateel
படீல் முதன்முதலில் ரியாத்தில் நிறுவப்பட்டாலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 1992 இல் அதன் முதல் கஃபேவைத் திறந்தது. பேரீச்சம்பழ சாக்லேட்டுகளுக்குப் பெயர் பெற்ற படீலின் தயாரிப்புகளில் பல உலகளாவிய சாக்லேட் வகைகளும் அடங்கும். சாக்லேட்டுகளுக்கு அப்பால், இந்த பிராண்ட் 2007 ஆம் ஆண்டில் ‘cafe bateel’ தொடங்கி உணவு துறையிலும் விரிவடைந்துள்ளது.
Al Nassma
ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த நிறுவனமான அல் நஸ்மா, ஒட்டகப் பால் சாக்லேட்டை உற்பத்தி செய்யும் முதல் பிராண்ட் ஆகும். துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் உத்தரவின் பேரில் 2008 இல் நிறுவப்பட்ட இது பல்வேறு வகையான சாக்லேட்டுகளை வழங்குகிறது.
Samha
அல் நஸ்மாவின் தாய் நிறுவனமான பிரைம் சாக்லேட்டால் 2019 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பிராண்ட், பேரீச்சம்பழம் நிரப்பப்பட்ட சாக்கலேட்டுகள் ஒட்டகப் பால் மூலம் தயாரிக்கப்படுகின்றன. பிறந்தநாள், கூட்டங்கள் மற்றும் குழந்தைகள் விருந்துகள் என சமூகக் கூட்டங்களில் பிரபலமான இந்த பிராண்ட், வைரல் பிஸ்தா குனாஃபா சுவையை ஒட்டகப் பால் பயன்படுத்தி வழங்குகிறது.
I love Dubai
ஐ லவ் துபாய் ஐக்கிய அரபு அமீரகத்தின் சுவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, பிஸ்தா பக்லவா சாக்லேட் (pistachio baklava chocolate), கஹ்வா க்ரஞ்ச் (gahwa crunch) மற்றும் ஹல்வா ரஹாஷ் (halwa rahash) போன்ற கவர்ச்சிகரமான தயாரிப்புகளை வழங்குகிறது. இந்த பிராண்ட் கஹ்வா (அரபு காபி) மற்றும் எள் சார்ந்த இனிப்பு வகையான ஹல்வா போன்ற பொருட்களுடன் உள்ளூர் கலாச்சாரத்தைக் கொண்டாடுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel