துபாயின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றான குளோபல் வில்லேஜ், அதன் வரவிருக்கும் சீசன் 30க்கான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் விருந்தினர் சேவைகளுக்கான வணிக திட்டங்களை இப்போது ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. சுமார் 10.5 மில்லியன் பார்வையாளர்களை வரவேற்ற கடந்த சீசன் 29 ஐத் தொடர்ந்து, இந்த இடம் தொழில்முனைவோர் மற்றும் வணிக உரிமையாளர்களை அதன் அடுத்த பதிப்பில் சேர அழைக்கிறது. எனவே, தங்கள் சில்லறை வணிகத்தைத் தொடங்க அல்லது விரிவுபடுத்த விரும்புவோர், (https://business.globalvillage.ae) இல் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.
சில்லறை வணிகங்கள் மில்லியன் கணக்கான சர்வதேச பார்வையாளர்களை சென்றடைய இந்த குளோபல் வில்லேஜ் ஒரு வாய்ப்பை வழங்குகிறது மற்றும் விருந்தினர் சேவைகளுக்கான சீரான செயல்பாடுகளை உறுதி செய்வதற்கு வலுவான ஆதரவையும் உள்கட்டமைப்பையும் வழங்குகிறது.
குளோபல் வில்லேஜ் 1997 முதல் ஒரு பிரபலமான பன்முக கலாச்சார இடமாக இருந்து வருகிறது, இன்றுவரை 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை வரவேற்கிறது. கடந்த சீசன் 29 இல் 90க்கும் மேற்பட்ட கலாச்சாரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 30 அரங்குகள், 3,500க்கும் மேற்பட்ட ஷாப்பிங் கடைகள், 250க்கும் அதிகமான சாப்பாட்டு அனுபவங்கள், 40,000 நிகழ்ச்சிகளில் 400 கலைஞர்கள் மற்றும் கார்னிவலில் 200க்கும் மேற்பட்ட சவாரிகள் மற்றும் விளையாட்டுகள் இடம்பெற்றன. அதேபோல் இனி வரவிருக்கும் சீசன் 30க்கான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குளோபல் வில்லேஜ் நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel