அபுதாபி மொபிலிட்டி, அபுதாபி மற்றும் அல் அய்ன் ஆகிய இரு இடங்களிலும் ஜூலை 25 வெள்ளிக்கிழமை தொடங்கி ஜூலை 28, 2025 திங்கள் அதிகாலை வரை தற்காலிக பகுதி சாலை மூடல்களை அறிவித்துள்ளது. அபுதாபியில், நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றான சுல்தான் பின் சையத் தி ஃபர்ஸ்ட் ஸ்ட்ரீட்டின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை இரவு 11:00 மணி முதல் திங்கள் அதிகாலை 5:00 மணி வரை பகுதியளவு மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், அல் அய்னில் உள்ள ஷேக் கலீஃபா பின் சையத் ஸ்ட்ரீட்டும் பகுதியளவு பாதை மூடல்களைக் காணும் என கூறப்பட்டுள்ளது. தவாம் மருத்துவமனை (Tawam Hospital) மற்றும் UAE பல்கலைக்கழகம் வழியாகச் செல்லும் இந்த முக்கிய பாதையின் வலது பாதை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:00 மணி முதல் திங்கள் அதிகாலை 5:30 மணி வரை மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த காலகட்டத்தில் போக்குவரத்து தாமதங்களைத் தவிர்க்க, வாகன ஓட்டிகள் தங்கள் பாதைகளை முன்கூட்டியே திட்டமிடவும், அபுதாபி மொபிலிட்டியின் சாலை அடையாளங்கள் மற்றும் புதுப்பிப்புகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel