ADVERTISEMENT

அமீரகத்தில் அடுத்து வரும் பொது விடுமுறை.. 3 நாள் தொடர் விடுமுறைக்கு வாய்ப்பு..!! எப்போது..??

Published: 3 Jul 2025, 12:54 PM |
Updated: 3 Jul 2025, 1:01 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் அதாவை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட நீண்ட வார விடுமுறையை குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சியாக அனுபவித்த நிலையில், அடுத்த பொது விடுமுறையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்லாமிய நாட்காட்டியில் ரபி அல் அவ்வல் (Rabi’ Al Awwal) மாதம் 12 ஆம் தேதி வரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாள் ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த பொது விடுமுறையாகக் கருதப்படும். இந்த நிகழ்விற்காக குடியிருப்பாளர்கள் ஒரு நாள் விடுமுறையைப் பெறுவார்கள்.

ADVERTISEMENT

வானியல் கணிப்புகளின்படி, 2025 ஆம் ஆண்டில் ரபி அல் அவ்வல் ஆகஸ்ட் 24 ஞாயிற்றுக்கிழமை தொடங்கி செப்டம்பர் 22 ஆம் தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உறுதிப்படுத்தப்பட்டால், நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை பின்வரும் தேதியில் எதிர்பார்க்கலாம்.

  • ரபி அல் அவ்வல் ஆகஸ்ட் 24 அன்று தொடங்கினால் வியாழக்கிழமை, செப்டம்பர் 4 நபிகள் நாயகத்தின் பிறந்தநாளாக இருக்கும்
  • ரபி அல் அவ்வல் ஆகஸ்ட் 25 அன்று தொடங்கினால் வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 5 நபியின் பிறந்தநாளாக இருக்கும்.

வெள்ளிக்கிழமை விடுமுறையாக இருந்தால், அதை வழக்கமான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையுடன் இணைத்து குடியிருப்பாளர்கள் மூன்று நாள் வார விடுமுறையை குடியிருப்பாளர்கள் அனுபவிக்கலாம். 2025 ஆம் ஆண்டு தீர்மானமானது, ஈத் அல் ஃபித்ர் மற்றும் ஈத் அல் அதா தவிர, பெரும்பாலான பொது விடுமுறை நாட்கள் வார நாட்களில் வந்தால் வாரத்தின் தொடக்கத்திற்கோ அல்லது முடிவிற்கோ மாற்ற அனுமதிக்கிறது. இந்த முடிவு ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவையின் பொறுப்பாகும். கூடுதலாக, தேவைப்படும்போது தனிப்பட்ட எமிரேட் கூடுதல் விடுமுறைகளை அறிவிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel