ஐக்கிய அரபு அமீரகத்தில் வெயில் வெளுத்து வாங்கினாலும் பல்வேறு பகுதிகளில் நிலையற்ற வானிலை நிலவி வருகின்றது. எனவே , நாடு முழுவதும் உள்ள குடியிருப்பாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. சமீபத்திய நிலவரப்படி, நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக அல் அய்ன் மற்றும் அல் தஃப்ரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை, இடியுடன் கூடிய மழை மற்றும் புழுதி புயல்கள் பதிவாகியுள்ளன.
இந்த சீரற்ற வானிலையைக் கருத்தில் கொண்டு, தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அல் அய்னுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இதற்கிடையில், சில வானிலை ஆர்வலர்கள் அல்-நௌத், அல்-பவாடி சாலை மற்றும் கார்ப்பரேட் கேம்ப் ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதேசமயம், எல்-ஹெர் போன்ற பகுதிகளில் பலத்த மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய மோசமான வானிலையின் போது, வாகன ஓட்டுநர்கள் சாலைகளில் வேகத்தைக் குறைக்கவும், பள்ளத்தாக்குகளைத் தவிர்க்கவும், மாற்று ஒளி மூலங்களை இயக்கவும், முதலுதவிப் பெட்டிகளை கையில் வைத்திருக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து விலகி இருக்கவும், வாகனம் ஓட்டும்போது கூடுதல் எச்சரிக்கையாக இருக்கவும், குறிப்பாக தூசியால் ஏற்படும் குறைந்த தெரிவுநிலையின் போது கவனமாக ஒட்டுமாறும் மக்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்.
சமீபத்தில், துபாயின் மார்கம் மற்றும் அபுதாபியின் அல் தஃப்ரா, அல் ஐனில் உள்ள உம் கஃபா, அல் ஃபகா, உம் அல் ஜுமூல் மற்றும் காத்ம் அல் ஷிக்லா போன்ற பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையற்ற தன்மை அடுத்த சில நாட்களுக்கு தொடரக்கூடும் என்றும், ஜூலை 25–26 வரை அதிக சுறுசுறுப்பான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, இந்த காலகட்டத்தில் குடியிருப்பாளர்கள் அதிகாரப்பூர்வ புதுப்பிப்புகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel