ஷார்ஜாவில் வசிப்பவர்கள் வாடகை ஒப்பந்தங்களை பதிவு செய்த பிறகு மின்சாரம், நீர் அல்லது எரிவாயு சேவைகளை செயல்படுத்த இனி தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷார்ஜா முனிசிபாலிட்டி மற்றும் ஷார்ஜா மின்சாரம், நீர் மற்றும் எரிவாயு ஆணையம் (SEWA) ஆகியவற்றுக்கு இடையேயான புதிய கூட்டாண்மையின் கீழ், குடியிருப்புகளின் குத்தகை (tenancy) சான்றளிக்கப்பட்டவுடன் பயன்பாட்டு சேவைகள் இப்போது தானாகவே செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இது கூடுதல் ஆவணங்கள் அல்லது பல அலுவலகங்களுக்கு வருகை தர வேண்டிய அவசியத்தை நீக்குகிறது.
இது எவ்வாறு செயல்படுகிறது?
- ஷார்ஜா முனிசிபாலிட்டியில் உங்கள் குத்தகை ஒப்பந்தம் (tenancy contract) சான்றளிக்கப்பட்ட பிறகு, SEWAவிடமிருந்து வைப்புத் தொகையுடன் (deposit) ஒரு குறுஞ்செய்தியைப் பெறுவீர்கள்.
- நீங்கள் டெபாசிட்டை செலுத்தியதும், உங்கள் மின்சாரம், நீர் மற்றும் எரிவாயு சேவைகள் தானாகவே செயல்படுத்தப்படும்.
இந்தப் புதிய அமைப்பு ஷார்ஜாவின் டிஜிட்டல் மாற்ற முயற்சிகளின் ஒரு பகுதியாகும், மேலும் காகிதப்பணிகளைக் குறைத்து சேவைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் குடியிருப்பாளர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முன்பு, குத்தகைதாரர்கள் நகராட்சியில் தங்கள் குத்தகையை சான்றளிக்கவும்
பின்னர் எமிரேட்ஸ் ஐடி மற்றும் சான்றளிக்கப்பட்ட ஒப்பந்தம் போன்ற ஆவணங்களுடன் ஆணையத்தில் தனித்தனியாக விண்ணப்பிக்கவும் வேண்டியிருக்கும். மேலும் சேவைகள் செயல்படுத்தப்படுவதற்கு பல நாட்கள் காத்திருக்க வேண்டும்.
ஆனால் இப்போது, இவை அனைத்தும் ஒரே தடையற்ற செயல்பாட்டில் செய்யப்படுகின்றன. இது குத்தகைதாரர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் இருவருக்கும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. அரசாங்க சேவைகளை எளிமைப்படுத்தவும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும் ஐக்கிய அரபு அமீரகத்தின் முயற்சிக்கு ஏற்ப இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என இது குறித்து கருத்து தெரிவிக்கின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel