ADVERTISEMENT

UAE: பிக் டிக்கெட்டில் தமிழருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. 150,000 திர்ஹம்ஸ் ரொக்கப்பரிசு..!!!

Published: 3 Jul 2025, 4:30 PM |
Updated: 3 Jul 2025, 5:01 PM |
Posted By: Menaka

சமீபத்திய பிக் டிக்கெட் டிராவில், மூன்று அதிர்ஷ்டசாலி பங்கேற்பாளர்கள் தலா 150,000 திர்ஹம்ஸ் ரொக்கப் பரிசை வென்றுள்ளனர். மேலும் மூன்று வெற்றிகளும் டிக்கெட் பண்டில் சலுகையின் (ticket bundle) மூலம் பெறப்பட்ட  இலவச டிக்கெட்டுகள் மூலம் கிடைத்தன என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

ADVERTISEMENT

2008 முதல் அபுதாபியில் வசித்து வரும் 39 வயதான இல்லத்தரசியான தவுதி புமைலிஸ்மு என்பவர், கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு மாதமும் தவறவிடாமல் ஆன்லைனில் பிக் டிக்கெட்டுகளை வாங்கி வந்திருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் டிக்கெட் பண்டல் சலுகையைப் பயன்படுத்தி, இரண்டு டிக்கெட்டுகளை வாங்கிய பிறகு நான்கு இலவச டிக்கெட்டுகளைப் பெற்றார், மேலும் அந்த இலவச டிக்கெட்டுகளில் ஒன்று அவருக்கு பரிசை பெற்றுக் கொடுள்ளது. பரிசுத் தொகையை தனது குழந்தைகளை கோடை விடுமுறைக்கு அழைத்துச் செல்ல பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கேரளாவைச் சேர்ந்த 46 வயதான கட்டுமானத் துறை சர்வேயரான அபிசன் ஜேக்கப், பல ஆண்டுகளாக பிக் டிக்கெட்டுகளை வாங்கி வருகிறார். அவரது வெற்றி டிக்கெட், அவரது 20 சக ஊழியர்களுடன் ஒரு குழுவாக வாங்கியதில் வாங்கப்பட்டது. இது குறித்து அவர் கூறுகையில் “நான் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். பரிசை எனது குழுவுடன் பகிர்ந்து கொள்ள திட்டமிட்டுள்ளேன்” என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மூன்றாவது வெற்றியாளர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். அவர் தனது மனைவி ஐஸ்வர்யா சுப்பிரமணியன் பெயரில் டிக்கெட்டை வாங்கிய நிலையில் பரிசு கிடைத்துள்ளது. அவர் கடந்த ஒன்பது ஆண்டுகளாக குடும்பத்துடன் துபாயில் வசித்து வருகிறார், தனியாகவும் நண்பர்களுடனும் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக டிராவில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இந்த வெற்றி டிக்கெட் தனியாக வாங்கப்பட்டது. இரண்டு டிக்கெட்டுகளை வாங்கிய பிறகு, அவர் பண்டில் சலுகை மூலம் நான்கு கூடுதல் டிக்கெட்டுகளைப் பெற்றார், மேலும் இந்த இலவச டிக்கெட்டுகளில் ஒன்று அவருக்கு அதிர்ஷடத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

ஜூலை மாதத்தில் 20 மில்லியன் திர்ஹம் கிராண்ட் பரிசு

பிக் டிக்கெட்டின் ஜூலை ப்ரோமோஷன் பங்கேற்பாளர்களுக்கு 20 மில்லியன் திர்ஹம் வரை வெல்லும் வாய்ப்பை வழங்குவதாக பிக் டிக்கெட் உறுதியளிக்கிறது, இதற்கான நேரடி டிரா ஆகஸ்ட் 3 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. கிராண்ட் பரிசைத் தவிர, ஆறு வெற்றியாளர்கள் ஒவ்வொருவருக்கும் டிராவின் போது 50,000 திர்ஹம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வியாழக்கிழமை, நான்கு வெற்றியாளர்களுக்கும் வாராந்திர இ-டிராக்களின் ஒரு பகுதியாக 50,000 திர்ஹம் வழங்கப்படும், பிரதான டிராவிற்கு முன் மொத்தம் 16 ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதுமட்டுமில்லாமல், ஜூலை 1 முதல் 24 வரை ஒரே பரிவர்த்தனையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ரொக்க டிக்கெட்டுகளை வாங்குபவர்கள் பிக் வின் போட்டியில் நுழைவார்கள், அபுதாபியில் நடைபெறும் நேரடி டிராவில் கலந்து கொள்ள நான்கு பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொருவருக்கும் 20,000 திர்ஹம் முதல் 150,000 திர்ஹம் வரை உத்தரவாதமான பரிசு வழங்கப்படும். இறுதிப் போட்டியாளர்கள் ஆகஸ்ட் 1 அன்று பிக் டிக்கெட் வலைத்தளம் வழியாக அறிவிக்கப்படுவார்கள்.

சொகுசு கார் டிராக்கள்

கூடுதலாக, கார் ஆர்வலர்கள் வரவிருக்கும் இரண்டு டிராக்களை எதிர்நோக்கலாம்:

  • ரேஞ்ச் ரோவர் வேலார்- ஆகஸ்ட் 3
  • BMW M440i- செப்டம்பர் 3

ஜூலை மாத டிக்கெட் பண்டில் சலுகைகள் :

  • இந்த மாதம் முழுவதும் டிக்கெட்டுகள் 2 வாங்கினால், 1 இலவசம் (ஆன்லைன் கொள்முதல்)
  • சையத் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் ஐன் விமான நிலைய கவுண்டர்களில் வாங்கும்போது, 2 வாங்கினால், பிக் டிக்கெட்டுக்கு  2 இலவசம்
  • ட்ரீம் காருக்கு 2 வாங்கினால் 3 டிக்கெட் இலவசம்

டிக்கெட்டுகளை [www.bigticket.ae] இல் அல்லது சையத் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் ஐன் விமான நிலையத்தில் உள்ள கவுண்டர்களில் வாங்கலாம்.

வாராந்திர இ-டிரா அட்டவணை

  • வாரம் 1: ஜூலை 1–9 | டிரா: ஜூலை 10 (வியாழன்)
  • வாரம் 2: ஜூலை 10–16 | டிரா: ஜூலை 17 (வியாழன்)
  • வாரம் 3: ஜூலை 17–23 | டிரா: ஜூலை 24 (வியாழன்)
  • வாரம் 4: ஜூலை 24–31 | டிரா: ஆகஸ்ட் 1 (வெள்ளிக்கிழமை)

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel