ADVERTISEMENT

ஜூலை 8க்கு பிறகு UAE-இந்தியா விமான டிக்கெட்டுகள் விலை சரிவு: முன்பதிவு செய்ய பயண முகவர்கள் அறிவுறுத்தல்..!!

Published: 3 Jul 2025, 7:49 PM |
Updated: 3 Jul 2025, 7:49 PM |
Posted By: Menaka

இந்த கோடை விடுமுறையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்குப் பயணிக்கத் திட்டமிடுபவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் விமான பயணத்திற்கான கட்டணம் கணிசமாக குறையும் என தெரியவந்துள்ளது. அதாவது,  ஜூலை 8 க்குப் பிறகு விமானக் கட்டணங்கள் வியக்கத்தக்க வகையில் மிக மலிவு விலைக்கு குறையும் என பயண முகவர்கள் கூறுகின்றனர்.

ADVERTISEMENT

ஜூலை தொடக்கத்தில் டிக்கெட்டுகள் 2,500 திர்ஹம்ஸ் முதல் 3,000 திர்ஹம்ஸ் வரை ஒரு சிறிய விலை உயர்வைப் பதிவு செய்த நிலையில், பிரபலமான இந்திய இடங்களுக்கான விமானக் கட்டணங்கள் 1,161 திர்ஹம்ஸ் முதல் 1,600 திர்ஹம்ஸ் வரை குறைந்த விலையில் கிடைப்பதாக அவர்கள் கூறுகின்றனர். அதாவது 2021–2022 கோடைக்குப் பிறகு நாம் கண்டிராத அளவுக்குக் கட்டணங்கள் குறைந்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த விலை வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

பயண முகவர்களின் கூற்றுப்படி, பல காரணிகள் இதில் பங்கு வகிப்பதாக தெரிகிறது. குறிப்பாக இந்திய வெளிநாட்டினர் இப்போதெல்லாம் இரண்டு மாத கோடை விடுமுறைக்குப் பதிலாக வருடத்திற்கு பல முறை பயணம் செய்கின்றனர். குறிப்பாக இண்டிகோ மற்றும் ஆகாசா போன்ற பட்ஜெட் விமான நிறுவனங்கள் அபுதாபியிலிருந்து புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்தியது பயணிகளுக்கு கூடுதல் விருப்பங்களை வழங்குகிறது மற்றும் விலைகளை உறுதிப்படுத்த உதவுகிறது.

ADVERTISEMENT

இதுமட்டுமில்லாமல் இப்போது பல ஐக்கிய அரபு அமீரகக் குடியிருப்பாளர்கள் குறுகிய கால விடுமுறையில் இந்தியா செல்வதை முற்றிலுமாகத் தவிர்த்து, அருகிலிருக்கும் அஜர்பைஜான், ஐரோப்பாவின் சில பகுதிகள் அல்லது ஆப்பிரிக்கா போன்ற இடங்களுக்கு குடும்ப சுற்றுலாவாக பயணிப்பதைத் தேர்வு செய்வதும் இதற்கு காரணமாக கூறுகின்றனர்.

கட்டண விபரங்கள்:

ஜூலை 8 க்கு முன் வரை கொச்சி மற்றும் கோழிக்கோடு போன்ற சிறிய நகரங்களுக்கான கட்டணம் 2,500–3,000 திர்ஹம்ஸை எட்டியது. மும்பை மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்கான விமானங்கள் கூட 2,000 திர்ஹம்ஸ்க்கு மேல் இருந்துள்ளது. அதுவே ஜூலை 8 க்குப் பிறகு பெங்களூருவிற்கு 1,604 திர்ஹம்ஸ் ஆகவும், சென்னைக்கு 1,809 திர்ஹம்ஸ் ஆகவும் உள்ளது. 2023 ஆம் ஆண்டில், இதே காலகட்டத்தில் விமான கட்டணங்கள் 2,800 திர்ஹம்ஸ் முதல் 3,000 திர்ஹம்ஸ் வரை அதிகபட்சமாக எட்டியது.

ADVERTISEMENT

அதிக விமானங்கள், சிறந்த சலுகைகள்

அமீரகத்திலிருந்து தற்போது கிடைக்கக்கூடிய விமானங்களின் அதிகரிப்பும் மற்றொரு முக்கிய காரணியாகும். விமான நிறுவனங்கள் தங்கள் இந்தியா- UAE வழித்தடங்களை, குறிப்பாக அபுதாபியிலிருந்து மதுரை உட்பட பல பகுதிகளுக்கு நேரடி சேவையை விரிவுபடுத்தியுள்ளன. இந்த திறன் அதிகரிப்பு டிக்கெட் விலைகளைக் குறைக்க உதவியதுடன் பயணிகளுக்கு கூடுதல் முன்பதிவு விருப்பங்களை வழங்கியுள்ளது.

தற்போது விலைகள் குறைவாக இருந்தாலும், பயணங்களுக்கான தேவை அதிகரிக்கும் போது கட்டணங்கள் விரைவாக மீண்டும் உயரக்கூடும் என்பதால், முன்கூட்டியே முன்பதிவு செய்ய பயண நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே இந்த கோடையில் இந்தியாவுக்கு பயணம் செல்ல திட்டமிடுபவர்கள், உங்கள் டிக்கெட்டுகளை இப்போதே முன்பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel