ADVERTISEMENT

UAE: இரவில் ஹெட்லைட் இல்லாமல் வாகனம் ஓட்டிய 30,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள்.. விதிக்கப்பட்ட அபராதம்..!!

Published: 11 Jul 2025, 2:08 PM |
Updated: 11 Jul 2025, 2:10 PM |
Posted By: Menaka

கடந்த 2024 ஆம் ஆண்டில், அமீரகம் முழுவதும் இரவில் ஹெட்லைட் இல்லாமல் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக வாகன ஓட்டிகளுக்கு சுமார் 30,000 க்கும் மேற்பட்ட அபராதங்களை விதிக்கப்பட்டதாக சமீபத்திய அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது, இது உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தும் கடுமையான போக்குவரத்து குற்றமாகும். அமீரக போக்குவரத்து சட்டங்களின்படி, சூரிய மறைவு மற்றும் சூரிய உதயத்திற்கு இடையில் மற்றும் மூடுபனி அல்லது மணல் புயல் போன்ற மோசமான தெரிவுநிலையின் போது ஓட்டுநர்கள் தங்கள் ஹெட்லைட்களை இயக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறுவது கூட்டாட்சி போக்குவரத்து மற்றும் சாலைச் சட்டத்தை மீறுவதாகும், மேலும் கடுமையான அபராதங்களுக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

எமிரேட்ஸ் வாரியாக பதிவு செய்யப்பட்ட மீறல்களின் புள்ளிவிபரங்கள்:

மேற்கூறியவாறு ஹெட்லைட்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியது துபாய் அதிக எண்ணிக்கையிலான குற்றங்களைப் பதிவு செய்துள்ளது. அதாவது 10,706 மீறல்கள் பதிவாகியுள்ளன. பிற எமிரேட்டுகளின் புள்ளிவிபரங்கள்:

  • ஷார்ஜா: 8,635
  • அபுதாபி: 8,231
  • அஜ்மான்: 1,393
  • ராஸ் அல் கைமா: 907
  • உம் அல் குவைன்: 74
  • ஃபுஜைரா: 67

விளக்குகள் இல்லாமல் வாகனம் ஓட்டுவதற்கான அபராதங்கள்

இரவில் அல்லது மூடுபனியில் ஹெட்லைட்கள் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 500 திர்ஹம் அபராதம் மற்றும் அவர்களின் ஓட்டுநர் உரிமத்தில் நான்கு பிளாக் பாயிண்ட்ஸ் விதிக்கப்படும். மேலும், உடைந்த டெயில்லைட்கள் அல்லது தவறான டர்ன் சிக்னல்களுடன் வாகனம் ஓட்டுவது 400 திர்ஹம் அபராதம் மற்றும் இரண்டு பிளாக் பாயிண்ட்ஸ்களுக்கு வழிவகுக்கும்.

ADVERTISEMENT

இதற்கிடையில், கடந்த ஆண்டு நாடு முழுவதும் பின்புற விளக்குகள் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக 10,932 வாகன வழக்குகளையும் அதிகாரிகள் பதிவு செய்தனர். இந்த மீறல்கள் பெரும்பாலும் பின்வரும் எமிரேட்களில்  பதிவாகியுள்ளன:

  • அபுதாபி: 4,279
  • துபாய்: 3,901
  • ஷார்ஜா: 1,603

மொத்தமாக, 2024 ஆம் ஆண்டில் தவறான விளக்கு அமைப்புகளைக் கொண்ட வாகனங்களுக்கு 34,811 அபராதங்கள் விதிக்கப்பட்டன. குறிப்பாக, 18,702 மீறல்களுடன் ஷார்ஜாவில் மட்டுமே பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த விதிமீறல்களை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரக போக்குவரத்து அதிகாரிகள் அனைத்து ஓட்டுநர்களும் தங்கள் வாகன விளக்குகளை தவறாமல் சரிபார்த்து, சாலையில் இறங்குவதற்கு முன் எல்லாம் செயல்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துமாறு தொடர்ந்து  வலியுறுத்துகின்றனர்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel