ஐக்கிய அரபு அமீரகம் கடுமையான கோடைக்காலத்தை அனுபவித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து குடியிருப்பாளர்களுக்கு நிவாரணம் அளித்து வந்தது. இந்நிலையில், மீண்டும் ஜூலை 28 அன்று, வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் தாண்டியதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. மேலும் ஒரு சில பகுதிகளில் தூசி புயலும் ஏற்பட்டுள்ளது. NCM அதிகாரிகளின் கூற்றுப்படி, அல் தஃப்ரா பகுதியில் அமைந்துள்ள ஓவ்டைடில் (Owtaid) அதிகபட்ச வெப்பநிலையாக 50°C பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமாவில் உள்ள பகுதிகளில் அதிகாலையில் மிதமான முதல் கனமழை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, NCM நாட்டின் சில பகுதிகளுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகளை வெளியிட்டது. இத்தகைய காலநிலையில், வாகன ஓட்டிகள் முற்றிலும் தேவைப்படாவிட்டால் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும், குறைந்த தெரிவுநிலை மற்றும் ஈரமான சூழ்நிலைகள் காரணமாக சாலையில் இருக்க வேண்டியிருந்தால் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இன்று ஜூலை 29 ஆம் தேதியைப் பொறுத்தவரை, இதேபோன்ற வானிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பிற்பகலில் வெப்பச்சலன மேகங்கள் மீண்டும் உருவாகலாம் என்று மையம் கூறியுள்ளது. இதனிடையே, காற்று லேசானது முதல் மிதமானது வரை வீசும் என்றும், மணிக்கு 40 கிமீ வேகத்தில் வீசும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது, இது பகலில் தூசியை கிளப்பி, தெரிவுநிலையைக் குறைக்கும் என்று கூறப்படுகின்றது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel