அமீரகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளின் படி, அமீரகத்தின் 30 நாள் சுற்றுலா மற்றும் விசிட் விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் ஓமனில் உள்ள வெளிநாட்டவர்கள் ஹோட்டல் முன்பதிவு உறுதிப்படுத்தல்களையும், விண்ணப்பிக்கும் நேரத்தில் ரிட்டர்ன் விமான டிக்கெட்டுகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஓமானில் உள்ள பயண நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
முன்னர், பயணிகளுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் புகைப்படம் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், புதுப்பிக்கப்பட்ட விதிகளின் கீழ் இந்த ஆவணங்கள் கட்டாயம் தேவை என கூறப்படுகிறது. அதன்படி, அனைத்து விண்ணப்பங்களும் இப்போது உறுதிப்படுத்தப்பட்ட தங்குமிடம் மற்றும் திரும்பும் பயணத் திட்டங்கள் உள்ளிட்ட துணை ஆவணங்கள் கட்டாயமாகும்.
மேலும் இந்த ஆவணங்கள் அனைத்தும் அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான கூட்டாட்சி ஆணையம் (ICP) மற்றும் பொது ரெசிடென்சி மற்றும் வெளிநாட்டினர் விவகார இயக்குநரகம் (GDRFA) ஆகியவற்றின் வலைத்தளங்கள் உட்பட அதிகாரப்பூர்வ UAE போர்டல்கள் வழியாகவோ அல்லது ICP ஆப் மற்றும் Dubai Now போன்ற மொபைல் அப்ளிகேஷன்கள் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இல்லையென்றால், விண்ணப்பங்கள் தாமதங்களையோ அல்லது நிராகரிப்பையோ சந்திக்க நேரிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உறவினர்களுடன் தங்கியிருக்கும் நபர்களுக்கு, வீட்டு குத்தகை ஒப்பந்தத்தின் நகலும் தேவை என்று அறிக்கைகள் கூறுகின்றன.
விசா கட்டண அதிகரிப்புடன் இந்த விதி மாற்றங்களும் வருகின்றன. முன்பு 30 ஓமன் ரியாலாக இருந்த கட்டணம், தற்போது OMR 40 முதல் OMR 50 வரை வசூலிக்கப்படுகிறது, இது நிறுவனத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. விசா விண்ணப்பத்திற்கான புதுப்பிக்கப்பட்ட இந்த தேவைகள் சுற்றுலா மற்றும் விசிட் விசாக்கள் இரண்டிற்கும் பொருந்தும்.
இந்த புதிய நடைமுறைகள் குறித்து பயண முகவர்கள் வெளியிட்டுள்ள கருத்துப்படி, அமீரக அரசு கொண்டு வந்துள்ள இந்த மாற்றங்கள் விசா நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் ஒழுங்குமுறை இணக்கத்தை வலுப்படுத்துவதற்கும் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளின் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்றும் கூறப்படுகின்றது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel