வக்ரத் அல் மிர்ஸாம் (Waghrat Al Mirzam) என்று அழைக்கப்படும் ஆண்டின் தீவிர வெப்பமான கட்டங்களில் ஒன்றை ஐக்கிய அரபு அமீரகம் இப்போது அனுபவித்து வருகிறது. வரவிருக்கும் ஆகஸ்ட் 10 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த வெப்பமான காலம், அரேபிய தீபகற்பம் முழுவதும் கோடை வெப்பத்தின் உச்சத்தைக் குறிக்கும் ஒரு நிகழ்வாகும்.
சிரியஸ் அல்லது அல் ஷிரா அல் யமானியா என்றும் அழைக்கப்படும் அல் மிர்ஸாம் நட்சத்திரத்தின் உதயத்துடன் ஒத்துப்போகும் இந்த கட்டம், அரபு்நாடுகளின் உள்ளூர்வாசிகளால் பெரும்பாலும் “கோடையின் நிலக்கரி” என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இந்த குறிப்பிட்ட கட்டமானது அதி தீவிர வெப்பநிலையை அரபு நாடுகள் முழுவதும் கொண்டு வருகிறது.
வானிலை நிபுணர்களின் கூற்றுப்படி, சிரியஸ் என்றும் அல் மிர்ஸாம் என்றும் அழைக்கப்படும் இந்த நட்சத்திரம் உயரும்போது, பாலைவன வெப்பம் அதன் உச்சத்தை அடைகிறது, பின்னர் வெப்பநிலை அதிகரித்து ஈரப்பதம் மற்றும் ஹஜர் மலைத்தொடர் போன்ற மலைப் பகுதிகளில் மேகமூட்டம் உருவாகுவதற்கான செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும் எனத் தெரிகிறது.
மேலும் இந்த நட்சத்திரமான சிரியஸ், கேனிஸ் மேஜர் விண்மீன் கூட்டத்தின் ஒரு பகுதியாகும், மேலும் பூமியிலிருந்து தெரியும் பிரகாசமான நட்சத்திரங்களில் இதுவும் ஒன்றாகும். 24,000°C க்கும் அதிகமான மேற்பரப்பு வெப்பநிலையுடன், இது பூமியிலிருந்து 8.6 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தாலும், சூரியனை விட மிகவும் வெப்பமாகவும் பிரகாசமாகவும் இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.
வக்ரத் அல் மிர்ஸாம் என்பது பிராந்தியத்தின் பருவகால நாட்காட்டியில் உள்ள பல பாரம்பரிய கோடை கட்டங்களில் ஒன்றாகும். இது வக்ரத் அல் துரய்யா மற்றும் வக்ரத் அயூக் போன்ற முந்தைய கட்டங்களைப் பின்பற்றுகிறது மற்றும் வக்ரத் அல் நுஜய்மத்துக்கு சற்று முன்பு வருகிறது, இது குளிர்ந்த காலநிலையை நோக்கி படிப்படியாக மாறுவதற்கான தொடக்கத்தைக் குறிக்கிறது என்றும் வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel