ஐக்கிய அரபு அமீரகத்தில் செவ்வாய்க்கிழமை 20 வயது இந்தியப் பெண் ஒருவர் தனது குழந்தையைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரமான சம்பவம் ஷார்ஜாவில் உள்ள குடியிருப்பு பகுதியில் பிற்பகல் நேரத்தில் நடந்ததாகக் கூறப்படுகின்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை சடலங்களை மீட்டு பிற்பகல் 2 மணியளவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் விரிவான பிரேத பரிசோதனைக்காக தடயவியல் ஆய்வகத்திற்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
பரிசோதித்த மருத்துவரின் கூற்றுப்படி, பெண்ணின் கழுத்தில் காணக்கூடிய அடையாளங்கள் தற்கொலை என்பதைக் குறிக்கின்றன. அங்கு ஒரு வயது நான்கு மாதம் ஆன குழந்தையும் இறந்து கிடந்தது, மேலும் ஆரம்ப ஆய்வுகள் குழந்தையின் இறப்புக்கு தாயே காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கின்றன.
தற்போது அல் புஹைரா காவல் நிலையத்தால் சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கப்படும் நிலையில், இளம் தாய் இவ்வளவு பெரிய கொடூரமான செயலைச் செய்ய என்ன தூண்டியது என்பதைக் கண்டறிய அதிகாரிகள் முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தடயவியல் பரிசோதனைகள் முடிந்த பிறகு மேலும் விவரங்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel