ADVERTISEMENT

அபுதாபியில் திறக்கப்படவுள்ள புதிய சையத் நேஷனல் மியூசியம்.. பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் அற்புதமான கட்டிடக்கலை!! உள்ளே என்ன இருக்கிறது..???

Published: 12 Jul 2025, 1:45 PM |
Updated: 12 Jul 2025, 1:45 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கலாச்சார அடையாளங்களில் ஒன்றான சையத் நேஷனல் மியூசியம், டிசம்பர் 2025 இல் அபுதாபியில் அமைந்துள்ள சாதியத் ஐலேண்டில் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஸ்தாபக தந்தை ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களின் நினைவாக கட்டப்பட்ட இந்த அருங்காட்சியகம், அவரது மரபு மற்றும் தேசத்திற்கான தொலைநோக்குப் பார்வைக்கு அஞ்சலி செலுத்துவதாகக் கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

கட்டிடக்கலை அற்புதம்

உலகப் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் லார்ட் நார்மன் ஃபாஸ்டர் வடிவமைத்த இந்த அருங்காட்சியகத்தின் குறிப்பிடத்தக்க கட்டமைப்பில் பருந்து இறக்கைகள் போன்ற வடிவிலான ஐந்து எஃகு கோபுரங்கள் உள்ளன, இது எமிராட்டி கலாச்சாரத்தில் பருந்து வளர்ப்பின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. மேலும் நிலைத்தன்மை மற்றும் நாட்டின் பாரம்பரியம் அதன் வடிவமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியகத்திற்குள் என்ன இருக்கிறது?

ஆறு நிரந்தர காட்சியகங்கள் மற்றும் தற்காலிக கண்காட்சி இடம் ஆகியவற்றைக் கொண்ட இந்த அருங்காட்சியகம், 300,000 ஆண்டுகால மனித வரலாற்றின் ஆழமான பார்வையை வழங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. தொல்பொருள் கண்டுபிடிப்புகள் முதல் நவீன சாதனைகள் வரை அதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

ADVERTISEMENT

Abu Dhabi: Zayed National Museum to open in December 2025; what visitors can expect

  • உலகின் பழமையான இயற்கை முத்துக்களில் ஒன்றான அபுதாபி முத்து
  • நீல குர்ஆன், இஸ்லாமிய கலையின் தலைசிறந்த படைப்பு
  • சையத் பல்கலைக்கழகம் மற்றும் NYU அபுதாபியுடன் இணைந்து கட்டப்பட்ட ஒரு பண்டைய மாகன் படகின் (Magan Boat) மறுஉருவாக்கம்

Abu Dhabi: Zayed National Museum to open in December 2025; what visitors can expect

ADVERTISEMENT

இந்த அருங்காட்சியகம் அனைத்து பார்வையாளர்களுக்கும் முழுமையாக உள்ளடக்கிய அனுபவத்தை உறுதியளிக்ஜூன் என்றும், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் உட்பட அனைவரையும் வரவேற்கும் என்றும் கூறப்படுகின்றது. இது கல்வித் திட்டங்கள், சமூக நலன் மற்றும் எமிராட்டி அடையாளத்தில் வேரூன்றிய உலகளாவிய கலாச்சார உரையாடலை ஊக்குவிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவிக்கையில் “இந்த அருங்காட்சியகம் ஒரு பாதுகாப்பு இடம் மட்டுமல்ல; இது எங்கள் அடையாளத்தின் ஒரு கலங்கரை விளக்கம்” என்று அபுதாபியின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் தலைவர் முகமது கலீஃபா அல் முபாரக் கூறியுள்ளார். “இது பொருள்கள் மூலம் மட்டுமல்ல, உணர்ச்சி, நினைவகம் மற்றும் பார்வை மூலம் எங்கள் கதையைச் சொல்கிறது.” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த அருங்காட்சியகம் ஷேக் சையத்தின் பாரம்பரியத்தைத் தொடரும் என்று கூறப்படுகின்றது, வரலாற்று மீதான அவரது ஆர்வம் 1971 இல் அல் அய்னில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் அருங்காட்சியகத்தை நிறுவ வழிவகுத்தது. இந்த அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் பழங்காலக் கற்கால மற்றும் வெண்கலக் கால கலைப்பொருட்கள் உட்பட அதன் தொகுப்புகள் ஆரம்பகால எமிராட்டி சமூகங்களின் மீள்தன்மை மற்றும் புதுமைகளை எடுத்துக்காட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel