இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் கூடி தங்களின் தேசபக்தி உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர். குடும்பங்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என எமிரேட்டில் வசிக்கும் இந்தியர்கள் பலர் தாய்நாட்டின் சுதந்திர தினத்தைக் கொண்டாட ஒன்று கூடிய நிலையில், காலை நேரத்தில் கொடியேற்றம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
துணைத் தூதரகத்தில் காலை 6 மணிக்கு தொடங்கிய விழாவில், பங்கேற்பாளர்கள் மூவர்ணக்கொடியில் இடம்பெற்றுள்ள காவி, வெள்ளை மற்றும் பச்சை நிற ஆடைகளை அணிந்து கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், விழாவிற்கு வந்திருந்த குழந்தைகள் கொடிகளை அசைத்தும், பெண்கள் மூவர்ண ஸ்கார்ஃப்கள் மற்றும் வளையல்களை அணிந்தும் தேசபக்தியை வெளிப்படுத்தியுள்ளனர், அதேநேரத்தில் ஆண்கள் தேசபக்தி வண்ணங்களில் குர்தாக்கள் மற்றும் தொப்பிகளை அணிந்து நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
தேசிய கீதத்துடன் கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய தூதர் ஜெனரல் சதீஷ் சிவன், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 4.36 மில்லியன் பலம் வாய்ந்த இந்திய சமூகத்தின் பங்களிப்புகளுக்காக அவர் பாராட்டியுள்ளார், மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தின் ஆதரவிற்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்தியா-அமீரக கூட்டாண்மை “நம்பிக்கை, பகிரப்பட்ட தொலைநோக்கு மற்றும் பரஸ்பர வளர்ச்சியில் உறுதியாக நங்கூரமிடப்பட்டுள்ளது” என்றும் விவரித்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.
கூடுதலாக, இந்த நிகழ்வில் பாரம்பரிய மற்றும் நவீன இந்திய கலை வடிவங்களை கலக்கும் கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் தேசியக் கொடியின் பரிணாம வளர்ச்சியைக் காட்டும் ஒரு ‘Tiranga’ புகைப்பட கண்காட்சியும் அடங்கும்.
பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தங்கள் பாரம்பரியத்துடன் இணைக்க உதவுவதற்காக விழாவிற்கு அழைத்து வந்ததாகத் தெரிவித்துள்ளனர். “இங்கே சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது, நாம் எங்கு வாழ்ந்தாலும், நம் இதயங்கள் இந்தியாவுக்காக துடிக்கின்றன என்பதை நினைவூட்டுகிறது” என்றும், “நம் குழந்தைகள் தங்கள் வேர்களுடன் இணைந்திருப்பதை உணருவது முக்கியம்” என்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியர்கள் பெருமிதமாகத் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel