ADVERTISEMENT

அமீரகத்தில் லேசான நிலநடுக்கம் பதிவு.. அதிர்வுகளை குடியிருப்பாளர்கள் உணர்ந்ததாக தகவல்!!

Published: 8 Aug 2025, 4:31 PM |
Updated: 8 Aug 2025, 4:31 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் சிலா பகுதியில் வியாழக்கிழமையன்று 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) அறிக்கை தெரிவிக்கிறது. UAE நேரப்படி, வியாழக்கிழமை அதிகாலை 12:03 மணிக்கு பதிவான இந்த நிலநடுக்கம் அப்பகுதியில் வசிக்கும் மக்களால் லேசாக உணரப்பட்டதாகவும், ஆனால் அது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை மற்றும் எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதையும் NCM உறுதிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ஏற்கனவே, இந்த வார தொடக்கத்தில், செவ்வாய்க்கிழமை இரவு 8:35 மணிக்கு கோர் ஃபக்கானில் 2.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கண்டறியப்பட்டது. அந்த நிலநடுக்கம் குடியிருப்பாளர்களாலும் சிறிது உணரப்பட்டது, ஆனால் அது உள்கட்டமைப்பில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியிருந்தனர்.

UAE: 3.5 magnitude earthquake hits Al Sila, 'slightly' felt by residents

ADVERTISEMENT

இந்த அளவிலான நிலநடுக்கங்கள் பொதுவாக பாதிப்பில்லாதவை என்றாலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் அவ்வப்போது சிறிய நிலநடுக்க நடவடிக்கைகள் ஏற்படுகின்றன. மேலும் இது போன்ற நிலநடுக்கங்கள் பெரியளவு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் இதனால் மக்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT