அபுதாபியில் உள்ள அதிகாரிகள் பல பகுதிகளில் தொடர்ச்சியான சாலை மூடல்களை அறிவித்துள்ளனர், இதில் நிரந்தரமான சாலை மூடல் இந்த வார இறுதியிலிருந்து அமலுக்கு வரவுள்ளது. இது தொடர்பாக அபுதாபி மொபிலிட்டி X தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை ஆகஸ்ட் 23, 2025 சனிக்கிழமை முதல், சையத் தி ஃபர்ஸ்ட் ஸ்ட்ரீட் மற்றும் ஹம்தான் பின் முகமது ஸ்ட்ரீட் இடையேயான அல் ஹிஸ்ன் ஸ்ட்ரீட்டின் ஒரு பகுதி இரு திசைகளிலும் மூடப்படும் என்று கூறியுள்ளது.
ஏற்கனவே, அல் அய்னில், சையத் பின் சுல்தான் ஸ்ட்ரீட் மற்றும் ஹெஸ்ஸா பின்த் முகமது ஸ்ட்ரீட்டில் உள்ள இண்டர்செக்ஷன் ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 25 திங்கள் வரை தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதே போல் கடந்த வாரம் எமிரேட் முழுவதும் பல பகுதி மூடல்களைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்தது. அபுதாபியில் உள்ள ஷேக் மக்தூம் பின் ரஷீத் சாலை (E11) மற்றும் ஸ்வீஹான் சாலை (E20) ஆகஸ்ட் 15 முதல் 17 வரை மூடப்பட்டன, அதே நேரத்தில் எமிரேட்ஸ் சாலை (E611) ஆகஸ்ட் 16 சனிக்கிழமை காலை 12 மணி முதல் ஆகஸ்ட் 18 வரை காலை 5 மணி வரை பகுதி மூடலைக் கண்டது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel