அபுதாபி எமிரேட்டில் அதன் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து தேவைகளை சமாளிக்க, ஷேக் சையத் பின் சுல்தான் ஸ்ட்ரீட்டுக்குச் செல்லும் முக்கிய நுழைவுப் புள்ளிகளில் ஒரு புதிய ஸ்மார்ட் அளவீட்டு முறை (ramp metering system) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) அறிவித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, ஏழு முக்கிய நுழைவுப் புள்ளிகள் இந்த மேம்பட்ட போக்குவரத்து விளக்கு அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளதாகவும் ITC அறிவித்துள்ளது, இது அபுதாபியை பிராந்தியத்தில் இதுபோன்ற தீர்வை செயல்படுத்தும் முதல் நகரங்களில் ஒன்றாக ஆக்குகிறது.
இது எப்படி வேலை செய்கிறது?
இந்த அமைப்பு சென்சார்கள் மற்றும் AI- மூலம் இயக்கப்படும் கேமராக்களை பயன்படுத்தி உண்மையான நேரத்தில் போக்குவரத்தை கண்காணிக்கிறது. வாகனங்களின் அடர்த்தியைப் பொறுத்து போக்குவரத்து விளக்கு நேரங்களை இந்த அமைப்பு தானாகவே சரிசெய்கிறது:
- போக்குவரத்து விளக்குகள் பீக் ஹவர்ஸில் கார் நுழைவை கட்டுப்படுத்துகின்றன, இதனால் இடையூறுகளைத் தவிர்க்கலாம்.
- போக்குவரத்து குறைவாக இருக்கும்போது அதிக வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
இந்த அமைப்பு வாகனங்களின் சீரான ஓட்டத்தை உறுதி செய்கிறது, அத்துடன் நெரிசலைக் குறைக்கிறது மற்றும் ஒட்டுமொத்த சாலை செயல்திறனை மேம்படுத்துகிறது.
இது குறித்து ஐடிசியின் தற்காலிக இயக்குநர் ஜெனரல் டாக்டர் அப்துல்லா ஹமத் அல் கஃபெலி கூறுகையில், இந்த தொழில்நுட்பம் போக்குவரத்து இயக்கத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துகிறது மற்றும் போக்குவரத்து அமைப்பின் நிலைத்தன்மைக்கு பங்களிக்கிறது என்று வலியுறுத்தியுள்ளார்.
இது எங்கு பயன்படுத்தப்படுகிறது?
ராம்ப் மீட்டர் அமைப்பு இப்போது கீழ்க்கண்ட இடங்களில் செயலில் உள்ளது:
- ஷக்பூத் பின் சுல்தான் ஸ்ட்ரீட்
- தஃபீர் ஸ்ட்ரீட்
- ஹத்பத் அல் குபைனா ஸ்ட்ரீட்(வெளியே செல்லும்)
- சலாமா பின்த் புட்டி ஸ்ட்ரீட்
- அல் தஃப்ரா ஸ்ட்ரீட்
- ரப்தான் ஸ்ட்ரீட்
- உம் யிஃபினா ஸ்ட்ரீட் எக்ஸிட்
இந்த மேம்படுத்தல் ஒரு முக்கியமான தருணத்தில் வந்துள்ளது. ஏனெனில் அபுதாபி எமிரேட்டின் மக்கள் தொகை 2024 இல் மட்டும் 7.5% அதிகரித்து 4.13 மில்லியன் மக்களை எட்டியுள்ளது என்பதைக் காட்டுகிறது. இதன்மூலம் கடந்த பத்தாண்டுகளில், அபுதாபியின் மக்கள் தொகை 51% அதிகரித்துள்ளது, அதாவது, மக்கள்தொகை 2014 இல் 2.7 மில்லியனிலிருந்து 2024 இல் 4.1 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. இதன் விளைவாக, முன்பை விட அதிகமான கார்கள் சாலையில் இருப்பதால், புதிய AI அமைப்பு தலைநகரின் சாலைகளில் போக்குவரத்தை திறமையாக நகர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகின்றது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel