ADVERTISEMENT

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய நைட் பீச்!! அனைவருக்கும் நுழைவு இலவசம்…

Published: 29 Aug 2025, 6:03 PM |
Updated: 29 Aug 2025, 6:03 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொளுத்தும் கோடை வெயிலால் பெரும்பாலான பார்வையாளர்கள் பகல்நேரங்களில் கடற்கரைக்குச் செல்ல விரும்புவதில்லை, எனவே, அவர்கள் சூரிய மறைவிற்குப் பிறகு மாலை நேரங்களில் குளிர்ச்சியான கடற்கரை அனுபவத்தை பெறுவதற்காக அபுதாபி ஒரு புதிய கார்னிச் நைட் பீச்சை திறந்துள்ளது, இது பார்வையாளர்களுக்கு இலவசமாக இரவில் ஓய்வெடுக்கவும் நீந்தவும் பாதுகாப்பான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் இடத்தை வழங்குகிறது.

ADVERTISEMENT

மேலும், பார்வையாளர்கள் 1,000 சதுர மீட்டர் நீச்சல் பகுதியை கேட்ஸ் 4 – 6 வழியாக அணுகலாம், குளிர்ந்த இரவு காற்றுடன் குளிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அதிகாரிகள் வெளியிட்டுள்ள விபரங்களின் படி, கார்னிச் இரவு கடற்கரை முழுமையாக விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டுள்ளது மற்றும் பாதுகாப்பு காவலர்கள், முதலுதவி சேவைகள் மற்றும் கைப்பந்து, கால்பந்து மற்றும் கூடைப்பந்தாட்டத்திற்கான விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. எனவே, பார்வையாளர்கள் பாதுகாப்புடன் வேடிக்கையான கடற்கரை அனுபவத்தைப் பெறலாம்.

இந்த கடற்கரை வார நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும், மேலும் வார இறுதி நாட்களில் நள்ளிரவு வரை (வெள்ளி முதல் ஞாயிறு வரை) திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இது கோடைக்கால வெப்பத்திலிருந்து தப்பிக்க ஒரு சிறந்த வழியாக அமைகிறது.

ADVERTISEMENT

அபுதாபியில் உள்ள மற்ற இரவு கடற்கரைகள்

ஹுதைரியாத் ஐலேண்ட், மர்சானா நைட் பீச்: இந்த கடற்கரையில் நீச்சல்கள், வசதியான லவுஞ்சர்கள், டைனிங் அவுட்லெட்டுகள் உள்ளன. இலவச கார்னிச் வசதியைப் போலன்றி, மார்சானா பீச் நாளைப் பொறுத்து மாறுபடும் கட்டணத்தை வசூலிக்கிறது. பெரியவர்களுக்கு வார நாட்களில் 50 திர்ஹம் மற்றும் வார இறுதி நாட்களில் 100 திர்ஹம் . ஆனால் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக அணுக முடியும்.

துபாயில் நைட் பீச்

துபாயில் ஜுமைரா 2, ஜுமேரா 3 மற்றும் உம் சுகீம் 1 ஆகியவை நைட் பீச்சிற்காக திறக்கப்பட்டுள்ளன. இவை எமிரேட்டில் இரவு கடற்கரை போக்கை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன, இந்த வசதிகள் கடந்த ஆண்டு மேம்படுத்தப்பட்டன.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel