அபுதாபி காவல்துறையானது சாலைகளில் அவ்வப்போது ஏற்படும் போக்குவரத்து விபத்துகள் குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் விளக்கும் வகையில் சமூக ஊடக தளத்தில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் திடீரென வாகனங்களைத் திருப்புவது மற்றும் கவனக்குறைவான வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துக்காட்டும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோவை தற்பொழுது அபுதாபி காவல்துறை வெளியிட்டுள்ளது.
“You Comment” என்ற விழிப்புணர்வு முயற்சியின் ஒரு பகுதியாக, கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைந்து பகிரப்பட்ட இந்த காட்சி, ஓட்டுநர்கள் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து இடையூறுகளுக்கு வழிவகுத்த நிஜ வாழ்க்கை சம்பவங்களைக் காட்டுகிறது.
காவல்துறை பகிர்ந்துள்ள ஒரு கிளிப்பில், ஒரு கார் திடீரென வளைந்து exit பாதை வழியாக வேகமாகச் சென்று, சாலை அடையாளத்தின் மீது மோதியதைக் காணலாம். மற்றொரு காட்சியில், ஒரு வாகனம் ஆபத்தான முறையில் பாதையை மாற்ற முயற்சிப்பது, மேலும் சுற்றியுள்ள போக்குவரத்தைத் தடுக்கும் போது மோதலை ஏற்படுத்துவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
#أخبارنا | بثت #شرطة_أبوظبي بالتعاون مع مركز المتابعة والتحكم وضمن مبادرة “لكم التعليق” فيديو لحوادث بسبب الانحراف المفاجئ .
التفاصيل:https://t.co/0ZAFYFv2MJ#لكم_التعليق#الانحراف_المفاجئ pic.twitter.com/V2CmObcEip
— شرطة أبوظبي (@ADPoliceHQ) August 1, 2025
போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ரோந்து இயக்குநரகம், இவ்வாறு பொறுப்பற்ற முறையில் எக்ஸிட் பாதையைப் பிடிக்க அல்லது முந்திச் செல்ல திடீர் விலகலைத் தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளை வலியுறுத்தியுள்ளது. இச்சம்பவங்களை மேற்கோள்காட்டி, “ஓட்டுநர்கள் பாதைகளை முந்திச் செல்வதற்கு அல்லது மாற்றுவதற்கு முன் சாலை தெளிவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பாதைகளுக்கு இடையில் பொறுப்பற்ற இயக்கம் அனைவருக்கும் ஆபத்தை விளைவிக்கும்” என்று காவல்துறை வலியுறுத்தியது.
இதுபோன்ற கவனக்குறைவான சாலை நடத்தையின் உண்மையான விளைவுகளைக் காண்பிப்பதன் மூலம் பாதுகாப்பான ஓட்டுநர் பழக்கத்தை மேம்படுத்துவதே இந்த பிரச்சாரத்தின் நோக்கமாகும் என காவல்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel