ADVERTISEMENT

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் ‘Freedom Sale’.. விமான டிக்கெட்டுகளில் அதிரடி தள்ளுபடி அறிவிப்பு!!

Published: 10 Aug 2025, 5:24 PM |
Updated: 10 Aug 2025, 5:30 PM |
Posted By: Menaka

இந்தியாவின் குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 79வது இந்திய சுதந்திர தினத்தை ஒரு பெரிய ஃப்ரீடம் சேலுடன் (Freedom Sale) கொண்டாடுவதாக அறிவித்துள்ளது, இந்த பிரம்மாண்டமான விற்பனையின் மூலம், UAE இணைப்புகள் உட்பட உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களுக்கான விமான டிக்கெட்டுகளை தள்ளுபடி விலையில் பெறலாம்.

ADVERTISEMENT

முக்கிய சிறப்பம்சங்கள்

உள்நாட்டு விமானங்களுக்கு 1,279 ரூபாய் (செக்-இன் பேக்கேஜ்களுடன் 1,379 ரூபாய் ) மற்றும் சர்வதேச விமானங்களுக்கு 4,279 ரூபாய் (செக்-இன் பேக்கேஜ்களுடன் 4,479 ரூபாய் ) இலிருந்து கட்டணங்கள் தொடங்கும் என்று விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

  • முன்பதிவு காலம்: ஆகஸ்ட் 10–15, 2025 வரை அனைத்து முக்கிய முன்பதிவு சேனல்களிலும் கிடைக்கும்.
  • பயண காலம்: ஆகஸ்ட் 19, 2025 – மார்ச் 31, 2026 வரை இந்த சலுகையின் கீழ் பயணிக்கலாம்.
  • சிறப்புச் சலுகைகள்: மாணவர்கள், மூத்த குடிமக்கள், ஆயுதப்படை வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படும் என்றும் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

UAE- இந்தியா இடையே பயணிப்பவர்களுக்கு சிறந்த வாய்ப்பு

இந்த விற்பனையின் கீழ் விமான நிறுவனம் 5 மில்லியன் இருக்கைகளை வெளியிடுவதாகக் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் 3.7 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களும் மற்ற நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளும் இந்த சலுகையின் மூலம் பயனடையலாம். இது துபாய், அபுதாபி, ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமாவை இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுடன் இணைக்கிறது. 116 விமானங்களைக் கொண்ட இது, 38 உள்நாட்டு மற்றும் 17 சர்வதேச இடங்களை இணைக்கும் 500க்கும் மேற்பட்ட தினசரி விமானங்களை இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

முன்பதிவு சேனல்கள்

  • ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் மொபைல் அப்ளிகேஷன் (ஆகஸ்ட் 10 அன்று பிரத்தியேக திறப்பு) மூலம் முன்பதிவு செய்யலாம். மேலும் ஆகஸ்ட் 15, 2025 வரை அனைத்து முக்கிய முன்பதிவு சேனல்களிலும் கிடைக்கும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel