இந்தியாவின் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனமானது, குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட்டுகளை வழங்கும் லிமிட்டெட் டைம் சலுகையான PayDay விற்பனையை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகையின் மூலம் அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு பயணம் செய்வதற்கான ஒரு வழி விமான சேவைக்கான கட்டணங்கள் 180 திர்ஹம்ஸ் முதல் தொடங்குகிறது.
செப்டம்பர் 1 வரையிலான முன்பதிவுகளுக்கு செல்லுபடியாகும் இந்த சிறப்பு சலுகையானது, மார்ச் 31, 2026 வரையிலான பயணத்திற்கான விமானங்களை முன்பதிவு செய்ய அனுமதிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட ஏராளமான நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.
இதன் சிறப்பு சலுகையான 180 திர்ஹம்ஸ் கட்டணமானது, விமான நிறுவனத்தின் எக்ஸ்பிரஸ் லைட் வகையின் கீழ் உள்ளது, ஆனால், இதில் செக்-இன் பேக்கேஜ் இல்லை.
பேக்கேஜ் அலெவன்ஸ் தேவைப்படுபவர்களுக்கு, எக்ஸ்பிரஸ் வேல்யூ வகையானது சர்வதேச வழித்தடங்களில் 200 திர்ஹம்ஸ் கட்டணத்தில் தொடங்குவதாகக் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச விமானங்களுக்கு மட்டுமல்லாது இந்தியாவிற்குள் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களுக்கும், இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனை இன்னும் மலிவான விருப்பங்களை வழங்குகிறது. அதன்படி, எக்ஸ்பிரஸ் லைட் கட்டணங்கள் சுமார் 54 திர்ஹம்ஸ் முதலும், எக்ஸ்பிரஸ் வேல்யூ கட்டணங்கள் 56 திர்ஹம்ஸிலிருந்தும் தொடங்குகின்றன.
மேலும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்யும் பயணிகள் பூஜ்ஜிய வசதிக் கட்டணங்களையும், தள்ளுபடி செய்யப்பட்ட செக்-இன் லக்கேஜ்களையும் பெறலாம். அதாவது, உள்நாட்டு விமானங்களுக்கு 42 திர்ஹம்ஸ் கட்டணத்தில் 15 கிலோ லக்கேஜ்ஜும், சர்வதேச விமானங்களுக்கு 54 திர்ஹம்ஸ் கட்டணத்தில் 20 கிலோ லக்கேஜ்ஜும் வாங்கலாம்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் இந்த சிறப்பு தள்ளுபடியானது, அமீரகத்தை தலைமையிடமாக கொண்ட ஏர் அரேபியாவின் அதிரடி தள்ளுபடி விற்பனையை தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஏர் அரேபியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இரண்டும் விமான கட்டணங்களைக் குறைத்து வருவதால், அமீரகத்தில் உள்ள இந்திய பயணிகள் தங்களின் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட ஆரம்பித்துள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel