ஐக்கிய அரபு அமீரகத்தில், புதிய பள்ளி ஆண்டின் தொடக்கமானது சமூக கொண்டாட்டமாகக் கருதப்படுகிறது. கடை தள்ளுபடிகள் மற்றும் பேக்கரிகளில் கஸ்டம் கேக்குகள் முதல் விபத்து இல்லாத நாள் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் வரை, வகுப்பறைகளுக்குத் திரும்புவதை மகிழ்ச்சியாகவும், மறக்கமுடியாததாகவும், பாதுகாப்பாகவும் மாற்றுவதில் கவனம் செலுத்தப்படுகிறது.
அதேபோன்று நீண்ட கோடை விடுமுறைக்குப் பிறகு, புதிய கல்வியாண்டில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் புதிய சீருடைகள் மற்றும் புத்தகங்களுடன் உற்சாகமாக வகுப்புகளுக்குத் திரும்புகின்றனர். சில பள்ளிகள் முதல் நாளை இலவச ஐஸ்கிரீம்கள் மற்றும் காவல்துறையினரின் நட்பு வருகைகளுடனும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையும் (RTA) அதன் தனித்துவமான வழியில் கொண்டாட்டத்தில் இணைந்தது. இது அல் குபைபா மற்றும் இன்சூரன்ஸ் மார்க்கெட் மெட்ரோ நிலையங்களில், மாணவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு மெட்ரோ வடிவ இக்லூ ஐஸ்கிரீம்களை வழங்கி உற்சாகப்படுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel