ஐக்கிய அரபு அமீரகத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான du, ‘Salary in the Digital Wallet’ என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி, தனது நிதி சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் தொழிலாளர்கள் தங்கள் சம்பளத்தை நேரடியாக du Pay வாலட்டில் பெற முடியும்.
இந்த புதிய சேவை நாட்டில் உள்ள ப்ளூ காலர் தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் மாதத்திற்கு 5,000 திர்ஹம்களுக்கு குறைவாக சம்பாதிக்கிறார்கள் மற்றும் வங்கி சேவைகளை குறைவாகவோ அல்லது அணுகாமலோ வைத்திருக்கிறார்கள்.
எனவே, இந்த சேவைக்காக பதிவுசெய்யப்பட்ட ஊழியர்களின் சம்பளம் நேரடியாக du Pay மொபைல் அப்ளிகேஷனில் வரவு வைக்கப்படும். அவர்கள் ஒரு du Pay கார்டையும் பெறுவார்கள், இதனால் அவர்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் ATMகளில் பணமில்லா பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து du Pay செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: “வாடிக்கையாளர்கள் du Pay உடன் பூஜ்ஜிய இருப்பு கணக்கைத் (zero-balance account) திறக்கலாம், பணத்தைக் கையாளுவதில் உள்ள தொந்தரவைத் தவிர்க்கலாம் மற்றும் டிஜிட்டல் பரிமாற்றங்கள் மற்றும் பணம் செலுத்துதல்களின் வசதியையும் அனுபவிக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் வாலட்டுகள் அமீரகம் முழுவதும் அன்றாட பரிவர்த்தனைகளுக்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், சம்பள ஒருங்கிணைப்புடன், du Pay பயன்பாடு, நிதிச் சேவைத் துறையில் அதன் பங்கை வலுப்படுத்துகிறது என்றும், சர்வதேச பணப் பரிமாற்றங்கள், பில் பேமெண்ட் போன்ற அம்சங்களையும் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel