துபாயின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றான துபாய் ஃபவுன்டைன் (Dubai Fountain), அதன் ஒத்திசைக்கப்பட்ட நீர், இசை மற்றும் ஒளி காட்சிகளால் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை நீண்ட காலமாக கவர்ந்து வருகின்றது. இந்நிலையில் டவுன்டவுன் துபாயில் அமைந்துள்ள இந்த வெளிப்புற ஈர்ப்பானது புதுப்பித்தலுக்காக கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் மாதம் மீண்டும் திறக்கப்படும் என்று அடிக்கடி குறிப்பிடப்பட்டாலும், எப்போது திறக்கப்படும் என்ற ஒரு காலக்கெடு உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், டவுன்டவுன் துபாயின் முக்கிய இடமான இது புதுப்பித்தல் பணிகள் தொடங்கிய போது பவுண்டனில் உள்ள தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு காலியாக காட்சியளித்தது. ஆனால் தற்பொழுது இது தண்ணீரில் நிரம்பியிருப்பதைக் காட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அதிகாரப்பூர்வமாக எப்போது திரும்பும் என்பது குறித்த யூகங்கள் அதிகரித்து வந்துள்ளது. பல சமூக ஊடக பயனர்கள் பவுண்டைன் எதிர்பார்த்ததை விட விரைவில் அதன் பிரபலமான நிகழ்ச்சிகளை மீண்டும் தொடங்கலாம் என்று விவாதித்துள்ளனர்.
இருப்பினும், டெவலப்பரான எமார் நிறுவனம் இந்த வதந்திகளை திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஆகஸ்ட் 22 அன்று ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில், “இந்த கட்டத்தில் துபாய் ஃபவுன்டைன் மீண்டும் திறக்கப்படும் தேதி எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போதைய பணிகளின் வேகத்தின் அடிப்படையில், அட்டவணைக்கு ஏற்ப முன்னேற்றம் தொடரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஏதேனும் முறையான புதுப்பிப்பு இருந்தால், அது எங்கள் அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் பகிரப்படும்” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel