துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) கோடையின் இறுதியில் பரபரப்பான பயணக் காலத்திற்கு தயாராக உள்ளது, குறிப்பாக, ஆகஸ்ட் 13 முதல் 25 வரை பெரும்பாலான குடும்பங்கள் விடுமுறையிலிருந்து திரும்புவதாலும், புதிய பள்ளி பருவத்திற்கு முன்னதாக மாணவர்கள் வருவதாலும் 3.6 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த காலகட்டத்தில் தினசரி பயணிகளின் எண்ணிக்கை சராசரியாக 280,000 ஆக இருக்கும் என்றும், முக்கியமாக ஆகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது 290,000 பயணிகளைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிகரிப்பு 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 9.88 மில்லியன் சர்வதேச பார்வையாளர்கள் என்ற சாதனை படைத்ததைத் தொடர்ந்து வருகின்றது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்திலேயே ஒப்பிடுகையில் 6 சதவீத அதிகரிப்பாகும்,
மேலும் துபாய் ஏர்போர்ட் 46 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளைக் கையாண்டு, இது உலகின் மிகவும் பரபரப்பான சர்வதேச விமான நிலையமாக அதன் நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த நிலையில் தற்பொழுதுள்ள உச்ச பயண காலத்தில் சீரான செயல்பாடுகளைப் பராமரிக்க துபாய் விமான நிலையங்கள் விமான நிறுவனங்கள், ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் வணிக கூட்டாளிகள் உட்பட oneDXB சமூகத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது என்று அறிக்கைகள் கூறுகின்றன.
மேலும் பயணிகளுக்கான பயண உதவிக்குறிப்புகளில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஸ்மார்ட் கேட்ஸைப் பயன்படுத்துதல், பயண ஆவணங்களை விரைவான அனுமதிக்கு தயாராக வைத்திருத்தல், விமான நிலையத்தின் ஓய்வறைகள், உணவு, ஷாப்பிங் மற்றும் துபாய் மெட்ரோ, ரைடு-ஹெய்லிங் சேவைகள் மற்றும் RTA டாக்ஸிகள் போன்ற வசதியான போக்குவரத்து இணைப்புகளைப் பயன்படுத்துதல் ஆகியவை தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதே போல் மாற்றுத்திறனாளி மக்களுக்கான ஆதரவில் குறிப்பிடத்தக்க அணுகல் வழிகள், சூரியகாந்தி லேன்யார்டுகளை அணிந்தவர்களுக்கு (Sunflower Lanyards) விவேகமான உதவி மற்றும் டெர்மினல் 2 இல் ஒரு பிரத்யேக உதவி பயண லவுஞ்ச் (Assisted Travel Lounge) ஆகியவை அடங்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் மூலம், புதிய கல்வியாண்டு தொடங்கும் போது துபாய் நகரத்திற்குத் திரும்பும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் இருவருக்கும் தடையற்ற பயண அனுபவத்தை வழங்குவதை DXB நோக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel