ADVERTISEMENT

துபாய் ஏர்போர்ட்டில் இருந்து மெட்ரோ சேவை: நேரம், வழித்தடங்கள், பேக்கேஜ் விதிகள் உள்ளிட்ட விபரங்கள் இதோ…

Published: 14 Aug 2025, 5:39 PM |
Updated: 14 Aug 2025, 5:39 PM |
Posted By: Menaka

துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு (DXB) டெர்மினல்கள் 1 மற்றும் 3 வழியாக வரும் பயணிகள் துபாய் மெட்ரோவைப் பயன்படுத்தி நகரத்திற்குள் செலவு குறைந்த மற்றும் வசதியான முறையில் பயணிக்கலாம். இருப்பினும், இந்த மெட்ரோக்கள் 24/7 இயங்காது. எனவே பயணம் செய்வதற்கு முன் மெட்ரோ அட்டவணைகளைச் சரிபார்ப்பது முக்கியம்.

ADVERTISEMENT

டெர்மினல் 1 நேரங்கள்

சென்டர் பாயிண்டுக்குச் செல்ல

  • திங்கள்–வியாழன்: காலை 5:06 – நள்ளிரவு 12:00
  • வெள்ளி: காலை 5:06 – நள்ளிரவு 1:00
  • சனி: காலை 5:06 – இரவு 11:59
  • ஞாயிறு: காலை 8:23 – காலை 11:59

எக்ஸ்போ 2020க்கு:

  • திங்கள்–வியாழன்: காலை 5:07 – இரவு 10:58
  • வெள்ளி: காலை 5:07 – இரவு 11:58
  • சனி: காலை 5:07 – இரவு 10:59
  • ஞாயிறு: காலை 8:07 – காலை 10:59

டெர்மினல் 3 நேரங்கள்

சென்டர் பாயிண்டுக்குச் செல்ல:

  • திங்கள்–வியாழன்: காலை 5:08 – அதிகாலை 12:00
  • வெள்ளி: காலை 5:08 – அதிகாலை 1:02
  • சனி: காலை 5:08 – அதிகாலை 1:01
  • ஞாயிறு: காலை 8:25 – மதியம் 12:01

எக்ஸ்போ 2020க்கு:

  • திங்கள்–வியாழன்: அதி காலை 5:05 – இரவு 10:56
  • வெள்ளி: அதி காலை 5:05 – இரவு 11:56
  • சனி: அதி காலை 5:05 – இரவு 10:57
  • ஞாயிறு: காலை 8:06 – காலை 10:58

குறிப்பு: முதல் மற்றும் கடைசி பயண நேரங்கள் நிலையம் மற்றும் திசையைப் பொறுத்து மாறுபடும். ரயில் மாறும் போது ஐந்து நிமிடங்களுக்குள் வெளிச்செல்லும் நடைமேடையை அடையவும்.

மெட்ரோ வழித்தடங்கள்

  • ரெட் லைன்: சென்டர்பாயிண்ட் ↔ எக்ஸ்போ 2020 / லைஃப் பார்மசி
  • கிரீன் லைன்: e& ↔ க்ரீக்
  • இன்டர்சேஞ்ச்கள்: யூனியன் & புர்ஜுமான் (ரெட் ↔ க்ரீன்), சோபா ரியாலிட்டி & DMCC (மெட்ரோ ↔ டிராம்)

மெட்ரோ நிலைய இயக்க நேரம்

  • திங்கள்–வியாழன்: அதிகாலை 5:00 – நள்ளிரவு 12:00
  • வெள்ளி: காலை 5:00 – நள்ளிரவு 1:00 (அடுத்த நாள்)
  • சனி: காலை 5:00 – நள்ளிரவு 12:00
  • ஞாயிறு: காலை 8:00 – நள்ளிரவு 12:00

துபாய் மெட்ரோ பேக்கேஜ் விதிகள்

RTA வெளியிட்டுள்ள விபரங்களின் படி, ஒவ்வொரு பயணியும் இரண்டு சூட்கேஸ்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

ADVERTISEMENT
  • பெரிய சூட்கேஸ்: அதிகபட்சம் 81 செ.மீ x 58 செ.மீ x 30 செ.மீ
  • சிறிய சூட்கேஸ்: அதிகபட்சம் 55 செ.மீ x 38 செ.மீ x 20 செ.மீ
  • அனைத்து பைகளும் நியமிக்கப்பட்ட கேபின் பகுதிகளில் வைக்கப்பட வேண்டும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT