அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் நிறைந்த துபாயில் பார்க்கிங் இடத்தைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கலாம், குறிப்பாக இரவு நேரங்கள் அல்லது பரபரப்பான நேரங்களில் காலியாக உள்ள பார்க்கிங் இடத்தைத் தேடுவது ஓட்டுநர்களுக்கு சிரமமாக இருக்கும். இருப்பினும், நகரம் முழுவதும் பல இடங்கள் இப்போது 24 மணி நேரமும் கட்டண வாகன நிறுத்துமிடத்தை வழங்குகின்றன, இது ஓட்டுநர்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்தவும், அபராதங்களைத் தவிர்க்கவும், குடியிருப்பு மண்டலங்கள், ஷாப்பிங் மால்கள் மற்றும் பரபரப்பான வணிக மாவட்டங்கள் போன்ற அதிக தேவை உள்ள பகுதிகளில் பாதுகாப்பான பார்க்கிங் இடங்களை வழங்கவும் உதவுகிறது.
மல்டி-ஸ்டோரி கார் பார்க்கிங்
பார்க்கின் (parkin) நிறுவனத்தால் இயக்கப்படும் பல மாடி கார் நிறுத்துமிடங்கள் துபாயின் எட்டு முக்கிய பகுதிகளில் கிடைக்கின்றன: அல் குபைபா, அல் சப்கா, நைஃப், ஓட் மேத்தா, அல் சத்வா, அல் ரிக்கா, பனி யாஸ் மற்றும் அல் ஜாஃபிலியா. இந்த இடங்களில் barriers அல்லது பார்க்கிங் டிக்கெட்டுகள் இல்லை. காரின் வாகன உரிமத் தகடுகள் (license plate) பார்க்கிங் பகுதி நுழைவாயிலில் தானாகவே ஸ்கேன் செய்யப்படுகின்றன, மேலும் கட்டணமானது பணம், கார்ட் அல்லது parkin செயலி மூலம் செலுத்தலாம். கட்டணங்கள் மணிக்கு 5 திர்ஹம் மற்றும் 24 மணி நேரத்திற்கு 40 திர்ஹம்ஸில் இருந்து தொடங்குகின்றன.
மசூதிகளுக்கு அருகிலுள்ள பார்க்கிங்
துபாயில் உள்ள 59 மசூதிகளுக்கு அருகில், M மற்றும் MP இன் கீழ் புதிய பார்க்கிங் மண்டலங்கள் தொழுகை நேரங்களில் ஒரு மணிநேர இலவச பார்க்கிங் வசதியை வழங்குகின்றன. இந்த நேரங்கள் தவிர்த்து, மற்ற நேரங்களில் 24 மணிநேர கட்டண பார்க்கிங் பொருந்தும்.
அல் கைல் கேட்
அல் கைல் கேட்டில், 24/7 கட்டண வாகன நிறுத்துமிடமான, மண்டலம் 365N, கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இது 4 திர்ஹம்ஸ் என்ற மணி நேர கட்டணத்துடன் 30 திர்ஹம்ஸ் என்ற நிலையான தினசரி கட்டணத்தை வசூலிக்கிறது.
பார்கோனிக் (Parkonic) நிர்வகிக்கும் பார்க்கிங் பகுதிகள்
பார்கோனிக் துபாயின் குடியிருப்பு பகுதிகள், சுற்றுலா தலங்கள் மற்றும் மால்களில் ஆயிரக்கணக்கான 24/7 தனியார் வாகன நிறுத்துமிடங்களையும் நிர்வகிக்கிறது. இருப்பினும் சில இடங்கள் வரையறுக்கப்பட்ட காலத்திற்கு இலவச பார்க்கிங் வழங்குகின்றன. அவற்றில் பாம் வெஸ்ட் பீச் (30 நிமிடங்கள்) மற்றும் துபாய் மெரினா மால் (வார நாட்களில் 3 மணிநேரம், வார விடுமுறை நாட்களில் 4 மணிநேரம்) ஆகியவை அடங்கும். இந்த குறுகிய கால இலவச நேரங்களுக்குப் பிறகு கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
அதே போல் கடந்த ஜூலை 2024 இல் துபாய் மால் சாலிக்-இணைக்கப்பட்ட கட்டண வாகன நிறுத்துமிடத்தை அறிமுகப்படுத்தியது. இதில் இலவச பார்க்கிங் வரம்புகள் நாளைப் பொறுத்து மாறுபடும். அத்துடன் மாலை விட்டு வெளியேறும்போது ஓட்டுநரின் சாலிக் கணக்கிலிருந்து கட்டணம் தானாகவே கழிக்கப்படும்.
துபாய் மால் பார்க்கிங் கட்டணம்
வார நாட்களில்
- 4 மணி நேரம் வரை: இலவசம்
- 4–5 மணி நேரம்: 20 திர்ஹம்ஸ்
- 5–6 மணி நேரம்: 60 திர்ஹம்ஸ்
- 6–7 மணி நேரம்: 80 திர்ஹம்ஸ்
- 7–8 மணி நேரம்: 100 திர்ஹம்ஸ்
- 8 மணி நேரத்திற்கு மேல்: 200 திர்ஹம்ஸ்
- 12 மணி நேரத்திற்கு மேல்: 500 திர்ஹம்ஸ்
- 24 மணி நேரத்திற்கு மேல்: 1,000 திர்ஹம்ஸ்
வார இறுதி நாட்கள்
24 மணி நேரத்திற்கு மேல்: 1,000 திர்ஹம்ஸ்
6 மணி நேரம் வரை: இலவசம்
6–7 மணி நேரம்: 80 திர்ஹம்ஸ்
7–8 மணி நேரம்: 100 திர்ஹம்ஸ்
8 மணி நேரத்திற்கு மேல்: 200 திர்ஹம்ஸ்
12 மணி நேரத்திற்கு மேல்: 500 திர்ஹம்ஸ்
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel