ADVERTISEMENT

அபுதாபி: பயங்கர கார் விபத்தில் இந்திய தம்பதிகள் பலி!! விபத்தில் சிக்கிய நான்கு மாத குழந்தை உயிருக்கு போராடி வரும் பரிதாபம்…

Published: 17 Aug 2025, 8:01 PM |
Updated: 17 Aug 2025, 8:03 PM |
Posted By: Menaka

ADVERTISEMENT

கடந்த வியாழக்கிழமை அதிகாலையில், அபுதாபியிலிருந்து ருவைஸுக்குப் பயணித்த ஒரு இந்தியக் குடும்பம் பயங்கர விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அனைவரையும் துயரில் ஆழ்த்தியுள்ளது. வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில், இந்திய தம்பதிகளான சையத் வாஹீத் (Syed Waheed) மற்றும் அவரது மனைவி சனா பேகம் (Sana Beeghum) ஆகியோர் தங்கள் மூன்று குழந்தைகளுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, அல் தனா நகரில் ஏற்பட்ட விபத்தில் இந்த துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சாலை விபத்தில் பெற்றோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், அவர்களின் குழந்தைகள் பலத்த காயமடைந்ததாகவும் கூறப்படும் நிலையில், நான்கு மாத குழந்தையான சையத் உமருக்கு (Syed Umar) மூளையில் பலத்த காயம் ஏற்பட்டு, தற்போது வென்டிலேட்டரில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், அந்த குழந்தை மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும், “வென்டிலேட்டரில் இருந்து அகற்றினால், குழந்தையின் இதயம் பெரும்பாலும் நின்றுவிடும், தானாக சுவாசிக்க முடியாது என்று மருத்துவர்கள் எங்களிடம் கூறியுள்ளனர்” என்றும் அவர்களைப் பராமரித்து வரும் அவர்களின் மாமா சையத் மதீன் தெரிவித்துள்ளார்.

மதீனின் கூற்றுப்படி, குழந்தையின் உடன் பிறந்தவர்களான எட்டு வயது சித்ரா முகமது (Sidrah Mohammed) மற்றும் ஒரு வயது சாதியா மிர்ஹா (Sadiya Mirha) ஆகியோருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு அடுத்த வார தொடக்கத்தில் வீடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

பெற்றோரின் மரணம் குறித்து குடும்பத்தினர் இன்னும் குழந்தைகளுக்குத் தெரிவிக்கவில்லை என்றும் மதீன் கூறியுள்ளார். இந்நிலையில் சித்ரா தனது அம்மாவையும் அப்பாவையும் அழைக்கச் சொல்லிக் கொண்டே இருப்பதாகவும், நீ குணமடைந்ததும் நாங்கள் அழைப்போம் என்று சொல்லி சமாளித்து வருவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பள்ளியில் பயின்று வந்ததால், அவர்களின் கல்வியை இங்கேயே தொடரலாமா அல்லது இந்தியாவில் உள்ள தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பலாமா என்பது குறித்து குடும்பம் இன்னும் முடிவு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel