ADVERTISEMENT

எரியும் லாரியை ஓட்டிச் சென்று அசம்பாவிதத்தை தவிர்த்த சவுதி இளைஞருக்கு 1 மில்லியன் ரியால் வெகுமதி!!

Published: 23 Aug 2025, 9:07 AM |
Updated: 23 Aug 2025, 9:07 AM |
Posted By: Menaka

சவுதி அரேபியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, மஹர் ஃபஹத் அல் தல்பாஹி (Maher Fahd Al Dalbahi) என்ற சவுதி இளைஞர் ஒருவர், தலைநகர் ரியாத்தின் அல்-தவாத்மி (Al-Dawadmi) கவர்னரேட்டில் ஏற்படவிருந்த பெரும் விபத்தை தடுக்க தனது உயிரைப் பணயம் வைத்து செயல்பட்ட சம்பவம் நாடு முழுவதும் வைரலானது.

ADVERTISEMENT

அல் தவாத்மி பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம் அருகே கால்நடை தீவனம் ஏற்றிக்கொண்டு வந்திருந்த லாரி ஒன்றில் திடீரென தீப்பிடித்தபோது, தனது உயிரை பற்றி சிறிதும் யோசிக்காத அந்த சவுதி இளைஞர், எரியும் லாரியை ஓட்டிச் சென்று, ஒரு பேரழிவைத் தடுத்து தனது துணிச்சலை வெளிப்படுத்தியிருந்தார்.

அவரது வீரச் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், அவரை பாராட்டும் விதமாக, மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவூத், முடி இளவரசர் மற்றும் பிரதமர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவூத் அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில், அந்த நபருக்கு ஒரு மில்லியன் ரியால் நிதி வெகுமதியுடன், மன்னர் அப்துல் அஜீஸ் பதக்கத்தை வழங்க உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

இந்த கௌரவத்திற்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்த அல் தல்பாஹியின் குடும்பத்தினர், இந்த அங்கீகாரத்தை கௌரவப் பதக்கம் என்றும், பல்வேறு துறைகளில் அதன் குடிமக்கள் செய்த தியாகங்களை மதிப்பிடுவதில் தலைமையின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பிற்கு இது ஒரு சான்று எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

GCC: ரியல் ஹீரோ இவர்தான்!! பெட்ரோல் நிலையத்திலிருந்து எரியும் லாரியை ஓட்டிச் சென்று பேரழிவைத் தவிர்த்த இளைஞர்…

ADVERTISEMENT

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel