துபாய் சர்வதேச விமான நிலையத்தின் கான்கோர்ஸ் டி-யில் புதன்கிழமை நடைபெற்ற துபாய் டூட்டி ஃப்ரீ (DDF) மில்லினியம் மில்லினியர் டிராவில் 1 மில்லியன் டாலர் வென்றதன் மூலம் இந்திய வெளிநாட்டவர் ஒருவர் சமீபத்திய மில்லியனராக மாறியுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த 55 வயதான பிரதீப் சலதன் என்பவர் தான் அந்த அதிர்ஷ்டசாலி வெற்றியாளர். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக துபாயில் வசித்து வரும் அவர், ஒரு கட்டிடக்கலை ஆலோசனை நிறுவனத்தில் ஆவணக் கட்டுப்பாட்டாளராகப் பணிபுரிந்து வருகிறார். துபாய் டூட்டி ஃப்ரீ வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆன்லைனில் வாங்கிய டிக்கெட் எண் 2747 உடன் சீரிஸ் 512 இல் ஜாக்பாட் பரிசை வென்றதாகக் கூறப்படுகிறது.
சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த டிராவில் பங்கேற்று வருவதாகக் கூறும் பிரதீப், இந்த முறை வெற்றி பெற்ற டிக்கெட்டின் பரிசுத்தொகையை இந்தியாவைச் சேர்ந்த ஒரு சக ஊழியருடன் பகிர்ந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான பிரதீப், “துபாய் டூட்டி ஃப்ரீக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன். நீங்கள் என் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாத்துள்ளீர்கள்” என்று நெகிழ்ச்சியுடன் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வெற்றி மூலம், 1999 ஆம் ஆண்டு தொடங்கிய மில்லினியம் மில்லியனர் விளம்பரத்தில் $1 மில்லியன் பரிசுத்தொகை வென்ற 256வது இந்தியர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். துபாய் டூட்டி ஃப்ரீயின் நீண்டகால டிராவில் பங்கேற்பாளர்கள் மற்றும் வெற்றியாளர்களின் மிகப்பெரிய குழுவாக இந்தியர்கள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel