GCC எனும் வளைகுடா நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டினர் இப்போது குவைத்திற்குள் நுழையும்போது வருகையின் போது விசா (visa on arrival) பெறலாம் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் (Ministry of Interior) அறிவித்துள்ளது. புதிய விதியின் படி, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், கத்தார் அல்லது பஹ்ரைனில் இருந்து செல்லுபடியாகும் ரெசிடென்ஸி பெர்மிட் வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள் வருகையின் போது விசாவைப் பெற முடியும்.
முன்னர், GCC நாடுகளின் ரெசிடென்ஸி பெர்மிட் வைத்திருப்பவர்கள் குவைத்திற்கு பயணம் செய்வதற்கு முன் இ-விசாவைப் பெற வேண்டியிருந்தது. இப்போது, தகுதியான பார்வையாளர்கள் குவைத் சர்வதேச விமான நிலையத்தின் விசா கவுண்டர்களில் மூன்று மாத சுற்றுலா விசாவைப் பெறலாம் என்று இமிக்ரேஷன் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தகுதிக்கான அளவுகோல்கள் பின்வருமாறு:
- மருத்துவர், வழக்கறிஞர், பொறியாளர், ஆசிரியர், நீதிபதி, ஆலோசகர், பத்திரிகையாளர், விமானி, மருந்தாளர், கம்ப்யூட்டர் புரோகிராமர், மேலாளர், தொழிலதிபர் மற்றும் பிற குறிப்பிட்ட பணிகள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட தொழில்களில் வேலைவாய்ப்பு பெற்றிருக்க வேண்டும்.
- ஆறு மாதங்களுக்கும் மேலாக செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் GCC ரெசிடென்சி பெர்மிட்.
- குவைத்தில் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கக் கூடாது.
- ரிட்டர்ன் டிக்கெட் வைத்திருக்க வேண்டும்.
- விமான நிலையத்தில் உள்ள விசா கவுண்டரில் விண்ணப்பிக்கும் போது குவைத்தில் தங்கவுள்ள முகவரியை வழங்க வேண்டும்.
இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருவதாகக் கூறப்பட்டுள்ளது. ஜூலை 2025 இல் குவைத் அறிமுகப்படுத்திய நாடு தழுவிய இ-விசா தளத்தைத் தொடர்ந்து இது தொடங்கப்பட்டது, இதில் சுற்றுலா, குடும்பம், வணிகம் மற்றும் அதிகாரப்பூர்வ விசாக்கள் அடங்கும். கூடுதலாக, ஆறு உறுப்பு நாடுகளிலும் பயணம் செய்ய அனுமதிக்கும் ஒருங்கிணைந்த GCC சுற்றுலா விசாவும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel