துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), சாலையில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, உம் சுகீம் ஸ்ட்ரீட்டிலிருந்து அல் பர்ஷா சவுத்திற்கான அனைத்து என்ட்ரி மற்றும் எக்ஸிட் இடங்களையும் தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது. எனவே, ஓட்டுநர்கள் சாலை அடையாளங்களைப் பின்பற்றி அல் பர்ஷா சவுத் பகுதியை அணுக அல்லது வெளியேற பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்:
- ஸ்ட்ரீட் 31 (ENOC பெட்ரோல் நிலையத்திற்கு அடுத்தது)
- துபாய் சயின்ஸ் காம்ப்ளக்ஸ் எக்ஸிட்
- அல் ஹடேக் ஸ்ட்ரீட்
- ஹெஸ்ஸா ஸ்ட்ரீட்
சாத்தியமான போக்குவரத்து தாமதங்களைத் தவிர்க்க, ஓட்டுநர்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, அதிக போக்குவரத்து நேரங்களில் சீக்கிரமாக வெளியேற ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
உம் சுகீம் ஸ்ட்ரீட் மேம்பாட்டுத் திட்டம்
இந்த சாலை மூடல், மே 2025 இல் தொடங்கப்பட்ட 332 மில்லியன் திர்ஹம் மதிப்புள்ள உம்மு சுகீம் ஸ்ட்ரீட் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இப்போது 70 சதவீதத்திற்கும் மேலாக நிறைவடைந்துள்ள இந்த திட்டத்தில், ஒவ்வொரு திசையிலும் நான்கு பாதைகள் கொண்ட 800 மீட்டர் சுரங்கப்பாதை உள்ளது. ஜுமேரா ஸ்ட்ரீட்டை உம் சுகீம்-அல் குத்ரா காரிடார் என்று அழைக்கப்படும் எமிரேட்ஸ் சாலையுடன் இணைக்கும் 16 கிலோமீட்டர் பெரிய நடைபாதை மேம்படுத்தலின் ஒரு பகுதியாக இந்த மேம்பாடு உள்ளது.
மேம்படுத்தலின் ஒரு பகுதியாக, ஜுமேரா ஸ்ட்ரீட், அல் வாஸ்ல் ஸ்ட்ரீட், ஷேக் சையத் சாலை, முதல் அல் கைல் ஸ்ட்ரீட், அல் அசயேல் ஸ்ட்ரீட் மற்றும் அல் கைல் சாலை ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டவை உட்பட ஆறு முக்கிய இண்டர்செக்ஷன்கள் மறுவடிவமைப்பு செய்யப்படுகின்றன. இந்தத் திட்டத்தில்மொத்தம் 4,100 மீட்டர் நீளமுள்ள நான்கு பாலங்கள் மற்றும் மூன்று சுரங்கப்பாதைகள் கட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel