ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள கோர் ஃபக்கானில் நேற்று 2.0 ரிக்டர் அளவுகோலில் ஒரு சிறிய நிலநடுக்கம் பதிவானதாக நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்க நிகழ்வு ஆகஸ்ட் 5, 2025 அன்று, அமீரக நேரப்படி இரவு 8:35 மணிக்கு 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
NCM இன் தேசிய நில அதிர்வு வலையமைப்பின்படி, இந்த நிலநடுக்கம் அப்பகுதியில் வசிக்கும் சிலரால் லேசாக உணரப்பட்டது, ஆனால் அமீரகம் முழுவதும் எந்த தாக்கமோ சேதமோ ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் சிறியது என்றும் எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்றும் NCM பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel